புதுச்சேரியில் பாஜகவிற்கு ட்விஸ்ட்.. 'யாரை எப்போது கணக்கு தீர்க்கனுமோ'.. ரங்கசாமி பேச்சு?
புதுச்சேரி: பாஜக முக்கிய இலாகாவை கேட்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்ற முதலமைச்சர் ரங்கசாமி செல்லும்போது, யாரை எப்போது கணக்கு தீர்க்க வேண்டுமோ அப்போது கணக்கு தீர்க்க வேண்டும் என்று பேசிக்கொண்டே சென்றதாக வீடியோவை பரப்பி வருகிறார்கள் எதிர்க்கட்சியினர். இதுபற்றி அவர் விளக்கம் அளித்தால் தான் முழு விவரம் தெரியவரும்.
கடலுக்கு போவம் ஸ்வர்ணம் என்ற கருப்பொருளை மையமாக வைத்து கடல் பயணத்தை தேசிய மாணவர் படையினர் மேற்கொள்கின்றனர். 63 நாட்கள் கடலில் பயணம் மேற்கொள்ளும் தேசிய மாணவர் படையினர் புதுச்சேரி, கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமேஸ்வரம் மற்றும் சென்னை வழியாக கிழக்குக் கடற்கரையோரமாக, ஏறத்தாழ 800 கிலோமீட்டர் மேற்கொள்ளும் கடல் பயணமானது செப்டம்பர் மாதம் 26-ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.

தேசிய மாணவர் படையின் கடல் பயண தொடக்க நிகழ்வு இன்று தேங்காய்த்திட்டு துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் அன்பழகன் ஆகியோர் என்சிசி மாணவர்களின் கடல் சாகச பயணத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மாணவர்கள் கடல் சாகசப் பயணம் மன தைரியத்தையும், எதையும் சாதிக்கும் ஊக்கத்தையும் தரும் என்றார். மேலும் நாடு வளம்பெரும் என்றும் வெற்றிக்கரமாக பயணத்தை முடிக்க வாழ்த்துகிறோம் என்றும் கூறினார். நாட்டின் வளர்ச்சி குழந்தைகள் கையில் உள்ளது என்றும் தலைவர்கள் இதை அறிந்து திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள் என்றும் முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார். தொடர்ந்து இலாகாக ஒதுக்குவது சம்பந்தமான கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி விரைவில் ஒதுக்கப்படும் என்றார். மேலும் ஏன் காலதாமதம் என்று தனக்கே தெரியவில்லை என்றும் கூறினார்.
பாஜக முக்கிய இலாகாவை கேட்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்ற முதலமைச்சர் ரங்கசாமி செல்லும்போது, யாரை எப்போது கணக்கு தீர்க்க வேண்டுமோ அப்போது கணக்கு தீர்க்க வேண்டும் என்று பேசிக்கொண்டே சென்றதாக வீடியோவை பரப்பி வருகிறார்கள் எதிர்க்கட்சியினர். இதுபற்றி அவர் விளக்கம் அளித்தால் தான் முழு விவரம் தெரியவரும்.
புதுச்சேரியில் என்டிஏ அரசு மீண்டும் அமைந்த போதிலும், என்.ஆர்.காங்கிஸ் - பாஜக இடையே அமைச்சரவையில் பங்கு உள்பட பல்வேறு விஷயங்களில் இழுபறி உள்ளது. கடந்த 20-ம் தேதி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கி பட்டியல் பரிந்துரையை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் முதல்வர் ரங்கசாமி அளித்துவிட்டார்.
முதல்வர் அனுப்பிய கோப்புக்கு ஒருவாரம் ஆகியும் இன்னும் ஆளுநர் அமைச்சர் இலாகாவுக்கு அனுமதியை தரவில்லை என கூறப்படுகிறது. பாஜகவுக்கு கடந்த முறையை போல் முக்கிய இலாகா இந்த முறை ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இது புதுச்சேரியில் விவாதமாக உருவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
