கொரோனாவிலும் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்.. இளம்பெண் மீட்பு.. 2 பேர் கைது!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வீட்டில் விபச்சார தொழில் நடத்திவந்த பெண் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து ஆன்லைன் மூலம் விபச்சாரம் அதிகளவில் நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பப்டுள்ளது. இதனால் ஓட்டல்கள், சொகுசு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் புதுச்சேரியில் விபச்சார தொழில் கொடிகட்டி பறக்கிறது.

இந்நிலையில் புதுச்சேரி வேல்ராம்பட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் அங்கு தமிழகப் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணை வைத்து விபச்சார தொழில் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரும், அவரது மனைவியின் அக்காவும் சேர்ந்து விபச்சார தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மீட்டு, பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில், விபச்சார தொழிலில் அந்தோணி என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால், ஊரடங்கு அமலில் உள்ளபோதும், புதுச்சேரியில் விபச்சாரம் தங்குதடையின்றி நடைபெற்று வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications