காரும் டூவிலரும் மோதல்.. அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட 2 இளைஞர்கள்.. ஷாக் சிசிடிவி காட்சிகள்!
Recommended Video
புதுச்சேரி: இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் சுரேஷ். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர். நண்பர்களான இருவரும், இருசக்கர வாகனத்தில் சென்னையில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு வந்தனர்.

அப்போது கூனிமேடு அருகே வந்தபோது, புதுச்சேரியில் இருந்து எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர்.
உடனே அவ்வழியாக சென்றவர்கள், அவர்கள் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து மரக்காணம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில், கார் நேருக்கு நேர் மோதுவதும், இதில் அவர்கள் அந்தரத்தில் தூக்கி வீசப்படும் நெஞ்சை பதபதைக்கும் காட்சிகள் உள்ளன.
சாலையில் தூக்கி வீசப்பட்டவர்களில் ஒருவர் விழுந்த வேகத்தில் அடிபட்டு உட்கார முயல்வதும், முடியாமல் கீழே விழுவதுமாக உள்ள காட்சி பெரும் சோகத்தைத் தருவதாக உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications