மத்திய அமைச்சரை மறந்து சென்ற பாஜக தலைவர்கள்.. கார் வராததால் கடுப்பான மன்சுக் மண்டவியா.. ஒரே பரபரப்பு
புதுச்சேரி: புதுவை வந்த மத்திய அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா தனது வாகனம் வராததால் பாதுகாவலர்களை கடிந்து கொண்டபடி அரை கிமீ தூரம் சாலையில் நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 2 நாள் பயணமாக பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், மன்சுக் மாண்ட்வியா புதுவை வருகை தந்திருந்தனர்.

பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் 2 நாட்கள் பயணமாக புதுவை வருகை தந்துள்ளார். பூத் கமிட்டி மற்றும் கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இவருடன் மத்திய தொழிலாளர் துறை அமைச்சரும், புதுவை பாஜக பொறுப்பாளருமான மண்சுக் மாண்ட்வியாவும் வருகை தந்து இருந்தார்.
சென்னையில் இருந்து கார் மூலமாக நிதின் நபின் புதுகை வருகை தந்தார். அப்போது அவரை வரவேற்க புதுவை பாஜக முக்கிய நிர்வாகிகள் நமச்சிவாயம், ராமலிங்கம், கல்யாண சுந்தரம் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது அவர்கள் தமிழ்நாடு புதுவை எல்லையான கோரிமேடு பகுதியில் காத்திருந்தனர்.
பாஜக தேசிய தலைவர் நிபின் நபின் வந்ததும் அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து அவர் அந்த காரில் இருந்து இறங்கி ரோடு ஷோ செல்வதற்காக மற்றொரு வாகனத்தில் ஏறினார். அப்போது நிதின் நபினுடன் பாஜக நிர்வாகிகள் நமச்சிவாயம், ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகிய உள்ளூர் தலைவர்கள் ஏறினர்.
ஆனால் மத்திய அமைச்சர் மண்சுக் மாண்வியாவை மறந்துவிட்டனர். இதற்கிடையே நிதின் நபின் ரோடு ஷோவாக சென்றார். இதனால் அவரது வாகனத்தை கூட்டம் சுற்றிக்கொண்டது. இதனால் மண்சுக் மாண்ட்வியாவின் காரால் முன்னே வர முடியவில்லை. இதனால் பாதுகாவலர்களை கடிந்து கொண்ட மண்சுக் மாண்ட்வியா சாலையில் நடக்க தொடங்கினார்.
கால் கிலோ மீட்டர் முதல் அரை கிலோ மீட்டர் வரை மன்சுக் மாண்ட்வியா நடந்தே வந்தார். அப்போது பாதுகாவலர்கள் அவரை சுற்றி நின்றபடி அவருடன் வந்தனர். ஜிப்மர் மருத்துவமனை வரை அவர் 10 நிமிடங்கள் நடந்தே வந்தார். என்னுடைய வாகனம் எங்கே என அவர் தனது பாதுகாவலர்களை கடிந்துகொண்டபடியே வந்தார்.
ஒரு மத்திய அமைச்சருக்கு கூட பாதுகாப்பு கொடுக்க முடியவில்லையா.. நடந்து தான் வர வேண்டுமா? என்று கூறியபடியே வந்தார். பாதுகாவலர்கள் வரும் வாகனம் அங்கு வரவைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த வாகனத்தில் அவர் ஏறி சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications