நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி வைத்தியலிங்கம் போட்டி.. சபாநாயகர் பதவியை உதறினார்!
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சபாநாயகர் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். இதையடுத்து தனது சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார்.
புதுச்சேரி மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸிக்கும் இடையேதான் நேரடிப்போட்டி.
புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் வைத்தியலிங்கம் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து வைத்தியலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை துணை சபாநாயகர் சிவகொழுந்துவிடம் அவர் கொடுத்துள்ளார்.

முதல் முறையாக
இன்று மதியம் 12.45 மணிக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அருணிடம் தனது வேட்பு மனுவை வைத்தியலிங்கம் தாக்கல் செய்கிறார். மக்களவை தேர்தலில் போட்டியிடும் வைத்தியலிங்கம் இரண்டு முறை புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராகவும், 7 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறார்.

விவசாயி
புதுச்சேரியை அடுத்த நெட்டப்பாக்கம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் அக்டோபர் 5, 1950ல் பிறந்தவர் வைத்திலிங்கம். புதுச்சேரியின் இரண்டாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற வெங்கடசுப்பா ரெட்டியாரின் மகனாவார். சென்னை லயோலாக் கல்லூரியில் பயின்று பின்னர் தமது குடும்ப விவசாயத்திற்கு திரும்பினார். 1969 ஆம் ஆண்டு புதுவை மருத்துவ சேவை இயக்குனராக இருந்த டா.சாம்பசிவத்தின் மகள் சசிகலாவை மணம் புரிந்தார். புதுவை மாநில நில வளர்ச்சி வங்கியின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

காங்கிரஸ் குடும்பம்
இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த வைத்திலிங்கம், 1971 ல் இருந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். மேலும் புதுச்சேரி மாநில கூட்டுறவு நிலவல வங்கித் தலைவர், புதுச்சேரி ஒழுங்கு முறை விற்பணை கூட தலைவர், மாநில விவசாயிகள் சங்க துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்பட்டவர்.

2 முறை முதல்வர்
1980 ஆம் முதல் முதலில் நெட்டப்பாகம் தொகுதியில் போட்டியிட்டு தோல்விடைந்தவர், 1985ல் மீண்டும் நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வைத்திலிங்கம் அப்போதைய பாருக் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றினார், தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1996 வரை புதுச்சேரி முதலமைச்சராக பதவி வகித்தார்.

ரங்கசாமி அமைச்சரவையில்
1996 ஆம் ஆண்டு தேர்தலிலும் நெட்டப்பாக்கம் தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டு 2000 வரை சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு தேர்தலிலும் நெட்டபாக்கம் தொகுதியில் இருந்து தேர்வான வைத்திலிங்கம் 2006 ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு ரங்கசாமி அமைச்சரவையில் தொழில் மற்றும் மின் துறை அமைச்சராக பணியாற்றினார். இதே அமைச்சரவையில் முதல்வராக இருந்த ரங்கசாமி நீக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு மீண்டு முதலமைச்சராக 2011 வரை இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார்.

வகிக்காத பதவியே இல்லை
5 முறை கிராமப்பகுதியான நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வந்த வைத்திலிங்கம், தொகுதி மறு சீரமைப்பு காரணமாக 2011ல் புதுச்சேரி நகரில் உள்ள காமராஜர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற எதிர்கட்சித்தலைவராக பொருப்பு வகித்தார். 2016 மீண்டும் காமராஜர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட வைத்திலிங்கம் சபாநாயகராக தொடர்ந்து பணியாற்றி வருகின்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications