மோடிக்கு ஒரு நியாயம்.. ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா.. வானதி சீனிவாசனுக்கு வந்த கோபம்
புதுவை: தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை வாழ்த்துவோர், நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி செல்லும் போது மட்டும் விமர்சிப்பது ஏன் என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
4 நாட்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய், அபுதாபி சென்றுள்ளார். கடந்த புதன்கிழமை துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலினை இந்திய தூதர் ஜெனரல் அமீர் பூரி மற்றும் அமீரக அமைச்சர்கள் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றனர்.
துபாயில் நடக்கும் உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழகத்தின் அரங்கை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றார். அங்கு அந்த அரங்கை திறந்து வைத்து பல்வேறு தொழிலதிபர்களை முதல்வர் சந்தித்து பேசினார்.

துபாய் விமான நிலையம்
துபாயில் விமான நிலையத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின், ஓட்டல் செல்வதற்கு துபாய் அரசு சார்பில் பிஎம்டபிள்யூ கார் அனுப்பப்பட்டது. முதல்வருக்கு துபாய் அரசு அளித்த வரவேற்பு இவையெல்லாம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சிலர் அரபிக் குத்து பாடலை பேக் கிரவுண்டில் போட்டு கொண்டாடி வருகிறார்கள்.

வானதி ஸ்ரீனிவாசன்
இந்த நிலையில் முதல்வரின் துபாய் பயணத்தை வரவேற்றுள்ள பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், திமுகவினருக்கு ஒரு கேள்வியையும் முன் வைத்துள்ளார். புதுச்சேரியில் பாஜக சார்பில் நடந்த கூட்டத்தில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார்.

முதலீடுகளை ஈர்க்க
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அதன் பலன்கள் குறித்து விளக்கப்பட்டது. புதிய முதலீடுகளை உருவாக்கவும் முதலீட்டாளர்களை ஈர்க்கவும் வெளிநாடு சென்ற தமிழக முதல்வர் பயணத்தை வரவேற்கிறோம்.
Recommended Video

மோடிக்கு ஏன் எதிர்ப்பு
அதே சமயத்தில் நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. இதே நோக்கத்திற்காகதான் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் அப்போதெல்லாம் திமுக விமர்சனம் செய்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்!












Click it and Unblock the Notifications