பாஜக அண்ணாமலையுடன் விவாதமா? அரசியலில் அவர் ஒரு சப் ஜூனியர்.. தொல் திருமாவளவன் கிண்டல்
புதுச்சேரி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் ஒரு சப் ஜூனியர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுவை காரைக்காலை அடுத்த நிரவியில் இயங்கும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அம்பேத்கர், புத்தர் சிலைகள் மரியாதை
அப்போது அம்பேத்கர் , புத்தர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ரூ 52 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை, மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருமாவளவன் வழங்கினார்.

விசிக தலைவர் தொல் திருமாவளவன்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், இயக்குநர் பாக்யராஜின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. அவர் எதையும் நிதானமாக பேசக் கூடியவர். சீர் தூக்கி பிரித்து பார்த்து பேசக் கூடியவர். அவரை யார் இப்படி பேச வைத்தார்கள் என தெரியவில்லை என்றார்.

அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடியா
அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடி செல்கிறார் என்பதை விவாதிக்க பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்தது குறித்து திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் விளையாட்டு போட்டிகளில் Category உள்ளது. அவை சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகும்.
Recommended Video

அண்ணாமலை சப் ஜூனியர்
அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவரோடு விவாதிக்க அவரை போல ஒரு சப் ஜூனியரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து அனுப்பி வைக்கிறேன் என திருமாவளவன் கிண்டலாக தெரிவித்தார். "அம்பேத்கர் செய்ததையும் பிரதமர் மோடி செய்ததையும் ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்து விவாதிக்க தயார். அண்ணன் திருமாவளவனை அழைக்கிறேன். அவர் சொல்லும் இடத்திற்கு அவர் சொல்லும் நேரத்தில் விவாதிக்கலாம் என பாஜக அண்ணாமலை பேசியிருந்தார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications