Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vijay: புதுச்சேரியிலும் திருந்தாத ரசிகர்கள்! விஜய்யை பார்க்க சாலை விதிகளை மீறும் தவெகவினர்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுவை சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் ரோடு ஷோ நடத்த திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் வந்தார். ்அவரை பார்த்த ரசிகர்கள் சாலை விதிகளை மதிக்காமல் இரு புறமும் குவிந்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

30 சட்டசபை தொகுதிகளை கொண்ட புதுவை சட்டசபைக்கு ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விஜய்யின் தவெக தனித்து போட்டியிடுகிறது.

vijay tvk puducherry

இந்த நிலையில் 28 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அண்மையில் விஜய் வெளியிட்டிருந்தார். மீதமுள்ள இரு தொகுதிகள் தவெகவின் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் போட்டியிடுகிறது.

லாஸ்பேட்டை- சாமிநாதன்
காரைக்கால் தெற்கு- அசனா
நெட்டப்பாக்கம் (தனி)- பெரியசாமி
திருபுவனை (தனி)- சாய் சரவணன் குமார்
முத்தியால்பேட்டை- பிரகாஷ்குமார்
பாகூர்- தனவேலு
ராஜ்பவன்- சந்திரன்
உப்பளம்- சிவா
அரியாங்குப்பம்- குமரவேலு
மணவெளி- ராமு
வில்லியனூர்- ரமேஷ்
முதலியார்பேட்டை- மணிபாலன்
மண்ணடிப்பட்டு- பாரதிதாசன்
உருளையன்பேட்டை- மரிய பிரான்சிஸ்
மங்கலம்- சத்யா
காமராஜ் நகர்- சுமன்
நெல்லித்தோப்பு- விக்னேஸ்வரன்
காலாப்பட்டு- சசிக்குமார்
இந்திரா நகர்- முருகன்
கதிர்காமம்- ஜெயந்தி
ஊசுடு (தனி)- சரவண பாலா
தட்டாஞ்சாவடி- பன்னீர் செல்வம்
ஏம்பலம் (தனி)- தமிழ்ச் செல்வன்
நெடுங்காடு (தனி)- காமராஜ்
திருநள்ளாறு- ராஜா முகமது
காரைக்கால் வடக்கு- வெங்கடேஷ்
நிரவி - கணேஷ்
மாஹே- பிரிஜேஷ்
ஏனாம்- தோட்டாராஜு

ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் இவர்களை ஆதரித்து விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்படி காலை 10 மணிக்கு தட்டாஞ்சாவடியிலும், 11 மணிக்கு கடலூர் சாலை மால் பகுதியிலும், பகல் 12 மணிக்கு தவளக்குப்பம் ஜங்ஷன் சாலையிலும் விஜய் பிரச்சாரம் செய்தார். மேலும் தட்டாஞ்சாவடி முதல் காலாப்பட்டு வரை ரோடு ஷோ நடத்துகிறார். விஜய்யை கண்டதும் ரசிகர்கள் சாலை விதிகளை கூட மதிக்காமல் சாலையின் இருபுறங்களிலும் குவிந்துள்ளனர்.

23 இடங்களில் பிரச்சாரம் செய்ய காவல் துறைக்கு அனுமதி கேட்டு தவெகவினர் கடிதம் அனுப்பியிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுவைக்கு வரும் விஜய், கொக்கு பார்க், வெங்கடசுப்பா ரெட்டி சிலை சதுக்கம், தவளக்குப்பம் சந்திப்பு, வில்லியனூர் - கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மட்டும் வேனில் இருந்தபடி பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்த பிரச்சாரத்தில் 5000 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது, தமிழக ரசிகர்கள், தமிழக தொண்டர்கள் கலந்து கொள்ளக் கூடாது, புதுவையைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும்.

விஜய் பேசும் இடங்களில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. வாட்டர் பாட்டில், பிஸ்கட் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி செய்து இருக்க வேண்டும். எங்கு அனுமதி வழங்கப்பட்டதோ, அங்கு மட்டும்தான் வேன் மேலே நின்று பேச வேண்டும். மற்ற இடங்களில் வேனின் மீது ஏறக்கூடாது.

ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் பிரச்சார வேனை பின் தொடரக்கூடாது. அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்குள் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை செல்ல வேண்டும் என்பன போன்ற 11 நிபந்தனைகளை புதுவை காவல் துறை விதித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+