புதுவையில் விஜய்க்கு "ஜீரோ" தான்.. மொத்தமாக அள்ளும் என்டிஏ கூட்டணி.. Praja Poll கருத்துக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி 19 முதல்25 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என பிரஜா போல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 10 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது எனவும், விஜய்யின் தவெகவிற்கு ஒரு இடங்களில் கூட வாய்ப்பு இல்லை என பிரஜா போல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அச்சாம் என மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுவையில் மீண்டும் என்.டி.ஏ கூட்டணியே வெற்றி பெறும் என பிரஜா போல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

Vijay Gets Zero in Puducherry NDA Set to Sweep Says Praja Poll Survey

புதுவை தேர்தல்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் சுமார் 9.50 லட்சம் (9,50,311) வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக, அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மற்றொரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி மற்றும் புதியாக களத்தில் நிற்கும் விஜய்யின் த.வெ.க. - நேயம் மக்கள் கழகம் ஒரு அணி என 4 முனை போட்டி நிலவுகிறது.

மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 16 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என இருக்கும் போது பிரஜா போல் என்.டி.ஏ கூட்டணி 19 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 10 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது. விஜய்யின் தவெகவிற்கு ஒரு இடங்களில் கூட வாய்ப்பு இல்லை என பிரஜா போல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

பிரஜா போல் கருத்துக்கணிப்பு

* என்.டி.ஏ கூட்டணி - 19 முதல் 25
* இந்தியா கூட்டணி - 6 முதல் 10
* விஜய்யின் தவெக - 0
* பிற கட்சிகள் - 0

என்.டி.ஏ கூட்டணி

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 10 தொகுதிகளிலும், அ.தி.மு.க மற்றும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் ல.ஜ.க தலா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்தியா கூட்டணி

திமுகவும் காங்கிரசும் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இதில் திமுக 21, காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சில தொகுதிகளில் காங்கிரஸும் தி.மு.க-வும் நேரடியாக மோதுகின்றன.

விஜய்யின் தவெக

28 தொகுதிகளில் தனித்துக் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகம், இரண்டு தொகுதிகளில் கூட்டணிக்கு ஒதுக்கியுள்ளது. நாம் தமிழர் கட்சியும் தனித்து களமிறங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+