தவெகவுக்கு police protection-ஐ பாருங்க! புதுச்சேரியை பார்த்து திமுக அரசு கற்றுக்கோங்க- விஜய் அட்டாக்
புதுச்சேரி: புதுவையில் நடைபெறும் ஆட்சி பாரபட்சமின்றி தமிழக வெற்றிக் கழகம் பொதுக் கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்துள்ளது. இதை பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என விஜய் விமர்சித்தார்.

புதுவை உப்பளம் துறைமுக மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பேசுவதற்கான பொதுக் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே வந்துவிட்ட விஜய், சரியாக 11.30 மணிக்கு பேசத் தொடங்கினார்.
பிரச்சார வாகனத்தின் மேலே வந்ததும் எல்லாரையும் பார்த்து கையசைத்தார். பிறகு எல்லாரும் நன்றாக இருக்கிறீர்களா என கேட்டார். இதையடுத்து தனது பேச்சை அவர் தொடர்ந்தார். அவர் தொடர்கையில், "என் நெஞ்சில் குடியிருக்கும்.. புதுவை மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
தனித்தனி இல்லை
மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம். புதுவை ஒரு தனி யூனியன் பிரதேசம். அவங்களுக்குத்தான் தமிழகம் தனி, புதுவை தனி. ஆனால் நாம் வேறு வேறு கிடையாது. நாம் அனைவரும் சொந்தம்தான்.
பாரதியார் இருந்த மண்
தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுவை மட்டுமில்லை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நம் வகையறா. எல்லாம் நம் உறவுதான். பாரதி இருந்த மண், பாரதிதாசன் பிறந்த மண். 1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் தமிழகத்தில் ஆட்சி அமைத்தார்.
1974-ல் புதுவையில் எம்ஜிஆர் ஆட்சி
ஆனால் 1974 ஆம் ஆண்டு புதுவையில் அவரது ஆட்சி அமைந்தது. தமிழகத்தில் அவரை மிஸ் செய்யாதீங்கன்னு எச்சரித்ததே புதுவைதான். தமிழகம் மாதிரியே புதுவை மக்கள் என்னை 30 ஆண்டுகளாக தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
குரல் கொடுப்பேன்
விஜய் தமிழகத்திற்கு மட்டும்தான் குரல் கொடுப்பான் என நினைக்காதீர்கள். புதுவைக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பான். அது எனது கடமையும் கூட! தமிழகத்தில் உள்ள திமுக அரசு மாதிரி புதுவை அரசு கிடையாது.
புதுவை சிஎம் சார்
வேறு கட்சி நடத்தும் அரசியல் நிகழ்வு என்றாலும் பாதுகாப்பு அளிக்கிறார்கள். புதுவை அரசுக்கும் புதுவை சிஎம் சாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை பார்த்தாவது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் கற்றுக் கொள்ள மாட்டார்கள். தேர்தலில் மக்கள் கற்றுக் கொடுப்பார்கள் என தெரிவித்தார்.
மாநில அந்தஸ்து
அவர் மேலும் பேசுகையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. புதுவை மாநில அந்தஸ்து கேட்டு பலமுறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை கொடுக்கவில்லை.
அமைச்சருக்கு இலாகா
வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கவில்லை. தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளை உருவாக்கவில்லை. 200 நாட்களாக ஒரு அமைச்சருக்கு இலாகா ஒதுக்கவில்லை. காரைக்கால் மொத்தமாக கைவிடப்பட்ட பகுதியாகதான் உள்ளது.
புதுவை சுற்றுலா
புதுவையில் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அளவில் பார்க்கிங் வசதி இல்லை, போதிய கழிப்பிடங்கள் இல்லை, புதுவை மக்களுக்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன். திமுகவை நம்பாதீர்கள். புதுவைக்கு போதிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை.
கடன் வாங்கும் நிலை
நிதி ஒதுக்காததால் கடன் வாங்கும் நிலை உள்ளது. இந்தியாவில் ரேஷன் கடையே இல்லாத மாநிலமாக புதுவை உள்ளது. புதுவை மக்களுக்காக இந்த விஜய் எப்போதும் துணை நிற்பேன். சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி புதுவையிலும் பறக்கும். இவ்வாறு தனது 13 நிமிட உரையில் பேசியிருந்தார்.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது!












Click it and Unblock the Notifications