திடீரென பாஜகவுக்கு ஓட்டு கேட்ட விஜய்.. ஷாக்கான தவெக வேட்பாளர்.. பாவம்யா அவரே ‘கன்ஃபியூஸ்' ஆகிட்டாரு!
புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை முதல் புதுச்சேரியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விஜய் தனது தவெக வேட்பாளருக்கு பதில் அவரை எதிர்த்து களமிறங்கி உள்ள பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த சம்பவம் நடந்தது.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் வரும் 9 ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கிவிட்டதால் அனைத்து கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தை போலவே புதுச்சேரியில் தனித்து களமிறங்கி உள்ளது.

இதையடுத்து விஜய் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலை முதல் புதுச்சேரியில் திறந்த வாகனத்தில் நின்று விஜய் தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
மணவெளி வேட்பாளருக்கு ஆதரவாக..
புதுச்சேரியின் மணவெளி சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் ராமு போட்டியிடுகிறார். தவளக்குப்பம் பகுதியில் இன்று விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திரண்டு நின்ற தொண்டர்கள் மத்தியில் பிரசார வாகனத்தின் மேல் நின்று விஜய் பேசினார். விஜய் அருகே மணவெளி சட்டசபை தொகுதியின் தவெக வேட்பாளர் ராமு நின்றிருந்தார்.
பெயரை மாற்றி சொன்ன விஜய்
இந்த சமயத்தில் விஜய், ''மணவெளி தொகுதியில் செல்வத்துக்கு ஆதரவு கொடுங்க'' என்று கூறினார். இதனால் தவெக வேட்பாளர் ராமு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது பெயர் செல்வம் இல்லை. ராமு என்று கூறினார். இதையடுத்து சுதாரித்த விஜய், ''ராமுவிற்கு ஆதரவு கொடுங்கள்'' என்று கூறினார்.
பாஜக வேட்பாளரின் பெயர்
விஜயின் இந்த குழப்பத்துக்கு முக்கிய காரணம் என்னவென்றால் அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தான். மணவெளி தொகுதியை எடுத்து கொண்டால் சிட்டிங் எம்எல்ஏவாக பாஜகவின் ஏம்பலம் ஆர் செல்வம் உள்ளார். இவர் புதுச்சேரி சபாநாயகராக உள்ளார். இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மணவெளி தொகுதி பிரசாரத்தின்போது தவெக வேட்பாளர் ராமுவிற்கு பதில் பாஜக வேட்பாளர் எம்பலம் செல்வத்தின் பெயரை விஜய் உச்சரித்து குழப்பத்துடன் வாக்கு சேகரித்துள்ளார்.
மணவெளியில் யார் யார் போட்டி?
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த மணவெளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆனந்தராமன், நாம் தமிழர் சார்பில் மா செ இளங்கோவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரி நிலவரம் என்ன?
புதுச்சேரி யூனியன் பிரதேசமாகும். இங்கு மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது ஆளும் கூட்டணியாக என்ஆர் காங்கிரஸ் - பாஜக உள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியாக காங்கிரஸ் - திமுக உள்ளது. இதுதவிர நாம் தமிழர், தவெக ஆகியவை தனித்து களமிறங்குகின்றன. இதனால் தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications