புதுச்சேரியில் விஜய்யின் டார்க்கெட் பெரிய பிரபலம்.. பாஜகவிற்கு 2 மாநிலத்திலும் தலைவலியாகும் தவெக
புதுச்சேரி: நடிகர் விஜய் புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வி. நாராயணசாமியைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுச்சேரி அரசியலில் பெரிய, அனுபவம் வாய்ந்த தலைவரான நாராயணசாமியின் ஆதரவை பெற வேண்டும் என்றும் கூட்டணி அமைய வேண்டும் என்றும் விஜய் விரும்புகிறாராம். இது மட்டும் நடந்தால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும். அதேபோல் தமிழகத்தில் திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து பாஜகவிற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்திவிடும்.
நடிகரும் தமிழக வெற்றிகழக தலைவரும், நடிகருமான விஜய், வெற்றிகரமாக புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்திவிட்டார். விஜய் இன்று புதுச்சேரியில் ஆளும் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசை மறைமுகமாக பாராட்டினார். அதாவது தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு புதுச்சேரி அரசிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது ஒருபுறம் எனில், கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரிகிறது. அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களை இணைப்பது மற்றும் நல்ல கூட்டணிணை உருவாக்குவது போன்ற வேலைகளில் மறைமுகமாக இறங்கி வருகிறார். அண்மையில் தமிழக வெற்றிக்கழத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார். தற்போது மேலும் சில தலைவர்கள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தவெகவில் நாளை இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இப்படி அடுத்தடுத்து பல்வேறு தலைவர்களை தன் பக்கம் இழுக்க ஆர்வம் காட்டும் விஜய், அடுத்த ஒரு மாதத்தில் பெரிய கூட்டணி அமைக்கவும் திட்டமிட்டு வருகிறாரா விஜய்யின் இந்த முயற்சிக்கு மறைமுகமாக சில அதிமுக தலைகள் ஆதரவு கொடுக்கிறார்களாம். மறுபுறம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தங்கள் பக்கம் இழுக்க அதிக ஆர்வம் காட்டுவதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.
இந்த சூழலில் இன்று புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், அரசியலில் பெரிய, அனுபவம் வாய்ந்த தலைவரான நாராயணசாமியின் ஆதரவை பெற வேண்டும் என்றும் கூட்டணி அமைய வேண்டும் என்றும் விஜய் விரும்புகிறாராம். விஜய்யின் இந்த நகர்வுகள் திமுகவிற்கு அதிர்ச்சியையும், பாஜகவிற்கு தலைவலியையும் ஏற்படுத்தி உள்ளதாம்.
ஏனெனில் புதுச்சேரியில் தற்போது என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான நாராயணசாமி போன்ற பெரிய தலைவரை விஜய் இழுப்பது, இந்த ஆளும் கூட்டணிக்கு (பாஜக உட்பட) ஒரு பலமான எதிரணியை உருவாக்கி, அவர்களின் வெற்றி வாய்ப்புக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இது பாஜகவிற்கு புதுச்சேரியில் தலைவலியை உருவாக்கும் என்கிறார்கள்.
மறுபக்கம் தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும்.. மேலும் தமிழ்நாட்டில் தவெக தனித்து அல்லது காங்கிரஸ் உடன் இணைந்து நிற்பது என்பது, ஆளும் திமுகவிற்கு எதிரான வாக்குகளை மேலும் பிரித்துவிடும். அப்படி பிரித்தால், பாஜகவின் கூட்டணி வியூகங்களை மொத்தமாக சிதைந்து போகும். தற்போதைய நிலையில் செங்கோட்டையன் அதிமுகவை விட்டு பிரிந்து தவெகவில் இணைந்திருப்பதால், தவெக அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
எனவே தவெக தனித்து நிற்கும் அல்லது அதிமுக பாஜக, திமுக இல்லாமல் தனியாக கூட்டணி அமைக்கும் என்பதும் உறுதியாகி உள்ளது. அப்படி விஜய் அமைக்கும் கூட்டணியில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஒருவேளை இணைந்தால், அது அதிமுக, பாஜக, திமுக ஆகிய மூன்று கட்சிகளுக்குமே தலைவலியாகும். வெற்றி வித்தியாசம் மிக குறைவாக மாறும் வாய்ப்பு உள்ளது.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு?












Click it and Unblock the Notifications