சில்லு சில்லா நொறுங்குது பாஜக.. கரெக்ட்டா "சிக்ஸர்" அடித்த காங்கிரஸ்! உடையுதா கூட்டணி? இதுவே காரணம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக தோல்வி அடைவதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன என்பது குறித்த அலசல்கள் வட்டமடிக்க துவங்கியிருக்கின்றன.. அதேசமயம், கூட்டணிக்குள் விரிசல்களும் பெருக துவங்கியிருக்கின்றன.
புதுச்சேரியை பொறுத்தவரை பாஜக + என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. எனவே, இந்த 2 கட்சிகளுக்குள்ளும் பல்வேறு அதிருப்திகள் தொடர்ந்து நிலவி வருகின்றன.
ரங்கசாமி: அதாவது, முதல்வருடன் கலந்து பேசி எந்த முடிவையும் எடுக்காமல், ஆளுநர் மூலமே மத்திய அரசு ஆட்சி நடத்தி வருவதாகவும், முதல்வர் ரங்கசாமியை பல விஷயங்களில் அவமதிப்பதாகவும், தொகுதியில் பல திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், அதிருப்திகள் வெடித்து வந்தன. இப்படிப்பட்ட சூழலில்தான் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பாஜக சார்பிலேயே வேட்பாளர் நிறுத்தப்பட்டதால், கூடுதல் அதிருப்திக்கு ஆளாகிவிட்டது என் ஆர் காங்கிரஸ்.. இதனால், பாஜகவுக்காக பிரச்சாரம் செய்யவும் போகவில்லை.. அதற்கேற்றவாறு, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு மக்களிடம் ஏற்கனவே நிறைய மவுசு உள்ளதால், எளிதான வெற்றியை பெற்றுவிட்டார்.
வைத்திலிங்கம்: காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் 4,26,005 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், பாஜக சார்பாக களமிறக்கப்பட்ட நமச்சிவாயம் 1,36,516 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். பாஜகவோ, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் மண்ணை கவ்விவிட்டது.
இதனால் அதிர்ச்சியுற்ற மேலிட பாஜக, 2 மாநில தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து மேலிடம் விசாரிக்க துவங்கியிருக்கிறதாம். அதன்படி, என்ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் 3 பேரும் டெல்லியில் முகாமிட்டுள்ளார்களாம்.
முகாம்கள்: அதேபோல, பாஜக வேட்பாளரான நமச்சிவாயம், பாஜக தலைவர் செல்வ கணபதி இருவருமே டெல்லியிலேயே தங்கி, முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்கள்.. தேர்தல் தோல்வியைவிட, புதுச்சேரி அமைச்சரவை மாற்றம், மத்திய அமைச்சரவையில் புதுவைக்கான முக்கியத்துவம் போன்றவை குறித்துதான் அதிகம் விவாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
கூட்டணியை நம்பி படுதோல்வியை சந்தித்துள்ளதால், அமைச்சரவையில் இருந்து வெளியேறி, ரங்கசாமி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாமா? என்பது குறித்தும் அக்கட்சி யோசித்து வருகிறதாம்.
செல்வ கணபதி: இதற்கு நடுவில், இந்த தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பாஜக ஆராய்ந்து வருகிறது.. அந்தவகையில், பாஜகவின் மாநில தலைவர் செல்வ கணபதியே என்று புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டி வருகிறார்.
தான் வைத்தது தான் சட்டம் என்று சுயநலமாக சிந்தித்து பல நிர்வாகிகளை வேலை செய்யவிடாமல் தடுத்து காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற வைத்த பெருமையும் செல்வகணபதியையே சேரும் என்றும், கட்சியின் நலன் கருதி உடனடியாக செல்வகணபதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் சாமிநாதன் காட்டமாக கூறியிருக்கிறார்.
வியூகங்கள்: இப்படிப்பட்ட சூழலில், பாஜகவை ஒரேடியாக காங்கிரஸ் வீழ்த்தியதற்கு காரணங்களும் இணையத்தில் வலம்வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சிறுமி கஞ்சா போதையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால், ஆளும் தரப்பு மீது புதுச்சேரி மக்களுக்கு இருந்த அதிருப்தியையேயே, காங்கிரசும், திமுகவும் கையிலெடுத்து பிரச்சாரம் செய்தது பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது.
இதைத்தவிர, ரெஸ்டோ பார் திறந்தது, கஞ்சா உட்பட போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தவறியது, நெரிசல் மிகுந்த நகரமாக புதுச்சேரியை மாற்றியது, மூடப்பட்ட ரேசன் கடைகளை மீண்டும் திறக்காதது, பணத்திற்கு பதிலாக, ரேஷனில் இலவச அரிசியை வழங்காதது போன்ற பிரச்சனைகளை முன்வைத்து திமுகவும், காங்கிரசும் செய்த பிரச்சாரங்கள்தான், புதுச்சேரியில் பாஜகவை சாய்க்க சாத்தியக்கூறுகளாக அமைந்திருந்ததாம்.
பரபரப்பு: ஆக மொத்தம், பாஜகவின் தோல்விக்கும், காங்கிரஸின் அபார வெற்றிக்கும் காரணங்கள் என்னென்ன? என்பது குறித்த விவாதங்கள் இணையத்தில் கிளம்பியிருக்கின்றன.. மறறொருபக்கம் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வரப்போகிறதா? என்ற எதிர்பார்ப்பும் புதுச்சேரியில் ஏற்பட்டு வருகின்றன.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications