இதுல ஒரு "சாமி"தான் வேணும்.. பாஜக முதல்வர் வேண்டாம்.. புதுச்சேரி மக்களின் அதிரடி!
புதுச்சேரி: புதுச்சேரியின் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார்? என்பது பற்றி, ஏபிபி நியூஸ் சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் அடுத்தடுத்து ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணியில் இருந்து திமுக எம்எல்ஏ ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாததால் அரசு கவிழ்ந்தது.

நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய போதிலும், புதுச்சேரியில் 38.2 சதவீத மக்கள் அவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் 45.8 சதவீத மக்கள் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதேநேரம், நமச்சிவாயம் இந்த கருத்துக் கணிப்பில் ஒரு ஆப்ஷனாக சேர்க்கப்படவில்லை எனத் தெரிகிறது. பாஜக முதல்வர் வேட்பாளராக நமச்சிவாயம் முன்மொழிய படுவார் என்று தெரிகிறது. அவரது செல்வாக்கு பாஜகவுக்கு சாதகம். எனவேதான் இதே சர்வே பாஜக கூட்டணி அங்கு 17 முதல் 21 இடங்களை வெல்லும், காங்கிரஸ் கூட்டணி 8 முதல் 12 தொகுதிகளை வெல்லும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications