தனியாக பிரியாணி சாப்பிட்ட சுவேதா.. பைக்குடன் விழுந்த போலீஸ்.. புதுச்சேரியில் ஜோடி சிக்கியது எப்படி

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் தான் அந்த கொலைகாரி சுவேதாவை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.. பெங்களூரு கே.ஆர்.புரம் சீகேஹள்ளி பகுதியில் உள்ளது "சாய் கிரீன்" என்ற அப்பார்ட்மென்ட்.. அங்கு வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை இவர் கொடூரமாக கொன்ற சம்பவம் கர்நாடகாவையே உலுக்கி விட்டது.. இந்த கொலையை செய்தது ஏன்? புதுச்சேரியில் எப்படி போலீசாரிடம் சிக்கினார்? சுவேதாவின் திட்டம் என்னவாக இருந்தது? என்பது பற்றியெல்லாம் தற்போது கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சாய் கிரீன் அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்துள்ள தம்பதி சோமசுந்தர் - முத்துலட்சுமி.. சோமசுந்தருக்கு 52 வயதாகிறது.. முத்துலட்சுமிக்கு 48 வயதாகிறது.. இவர்களது 2 மகள்களின் பெயர்கள் சுவேதா, சுப்ரியா (19)..

Swetha

பெங்களூரு சுவேதா

இதில் சுவேதா, கென்னத் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல், முத்துலட்சுமிக்கு பிடிக்கவில்லை.. அதனால் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இது சுவேதாவுக்கு எரிச்சலை தந்தது.. தன்னுடைய காதலுக்கு தொந்தரவாக இருக்கும் முத்துலட்சுமியை கொலை செய்ய பிளான் பேட்டார்..

அதன்படியே சம்பவத்தன்று சுவேதாவும் அவரது காதலன் கென்னத்தும் சேர்ந்து முத்துலட்சுமியை கொடூரமாக கொலை செய்துள்ளார்கள்.. சிறிது நேரத்தில் வெளியில் சென்ற தந்தையும், தங்கையும் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.. அப்போது அம்மா எங்கே? என்ன பண்ணே? என்று சுவேதாவை கேட்டுள்ளார் தங்கை..

எப்படியும் இந்த கொலையை தங்கை கண்டுபிடித்து விடுவாள் என்று பயந்து, தங்கையையும், அதை தடுக்க வந்த அப்பா சோமசுந்தரையும் கத்தியால் குத்தி கொன்றுள்ளார்கள் சுவேதாவும், கென்னத்தும்..

தனியாய் உட்கார்ந்து பிரியாணி சாப்பிட்ட சுவேதா

இந்த 3 கொலையை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி புதுச்சேரிக்கு தப்பி வந்துள்ளனர். கடந்த 23ம் தேதி புதுச்சேரி பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உட்கார்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம் சுவேதா.. அப்போதுதான் புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

காதலன் எங்கே என்று கேட்டதற்கு, கோவாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக போலீசாரிடம் கூறியிருக்கிறார் சுவேதா. இதற்கு பிறகே புதுச்சேரி வந்த பெங்களூரு போலீஸார் சுவேதாவை தங்களது கஸ்டடிக்கு மாற்றி அழைத்து சென்றிருக்கிறார்கள்.

உளறி கொட்டிய இளைஞன்

இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு புதுச்சேரி அண்ணா நகர் பகுதியில் உருளையன்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர், போலீஸாரைப் பார்த்ததும் திடீரென வேகமாக நடக்க ஆரம்பித்தார். சந்தேகமடைந்த உதவி ஆய்வாளர் அவரை மறித்து விசாரித்தபோது, மதுபோதையில் இருந்த அந்த இளைஞர், தன்னுடைய ஊர் பெயரை மாற்றி மாற்றி முன்னுக்குப் பின் முரணாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மேலும் சந்தேகமடைந்த சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், அவரைத் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு ஸ்டேஷனுக்கு சென்றார். அப்போது அந்த இளைஞர் திடீரென பைக்கில் இருந்து குதித்து தப்பியோடி உள்ளார்.. இதனால் பைக்கிலிருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளார் சப்-இன்ஸ்பெக்டர்.. அப்போதும் சளைக்காமல் அந்த இளைஞரை துரத்திச் சென்று சாதுரியமாக மடக்கிப் பிடித்தார். உடனே இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் கொடுத்தார்.

கென்னத் கைது

அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், அந்த இளைஞரை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்துள்ளார்.. அப்போதுதான் அவர் பெங்களூரு முக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சுவேதாவின் காதலன் கென்னத் என்பது உறுதியானது. இதையடுத்து பெங்களூரு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் புதுச்சேரி வந்து கென்னத்தைக் கைது செய்து அழைத்து சென்றனர்.

பெங்களூருவை உலுக்கிய கொலை வழக்கில் தொடர்புடைய 2 முக்கிய குற்றவாளிகளையும் அடுத்தடுத்து கைது செய்த புதுச்சேரி போலீஸாருக்கு பெங்களூரு காவல்துறையினர் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

அம்மா உடலுக்கு சூட்கேஸ்

இப்போது போலீஸ் வளையத்துக்குள் உள்ளார் சுவேதா.. பல்வேறு தகவல்களையும் போலீசாரிடம் வாக்குமூலமாக சொல்லி உள்ளார்.

அதாவது, அம்மாவை கொலை செய்த பிறகு, அந்த சடலத்தை யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து அப்புறப்படுத்த எச்.ஏ.எல் பகுதிக்குச் சென்று புதிய சூட்கேஸ்களை சுவேதாவும், காதலன் கென்னத்தும் வாங்கினார்களாம். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

கேட் வாசலில் சுருண்ட அப்பா

ஆனால், அவர்கள் திட்டமிட்டபடி முத்துலட்சுமியின் சடலத்தை மறைப்பதற்கு முன்பாகவே, அப்பா சோமசுந்தரும், தங்கை சுப்ரியாவும் எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் வந்துவிட்டனர். இதனால் தங்களின் கொலைத் திட்டம் அம்பலமாகிவிடும் என்ற பயத்தில், சுவேதாவும் கென்னத்தும் சேர்ந்து அங்கிருந்த கத்தியால் சோமசுந்தர் மற்றும் சுப்ரியா ஆகிய 2 பேரையும் சரமாரியாகக் குத்தியுள்ளனர்.

இந்த கத்தி தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, சோமசுந்தர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். ஆனால், உடம்பெல்லாம் காயமடைந்திருந்தால், அந்த அப்பார்ட்மென்ட் வாசலைகூட அவரால் தாண்ட முடியாமல், கேட் வாசலிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தது சுவேதாவிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+