ஸ்லிம் ஆக டிப்ஸ்.. பெண் போல பேசி இளம்பெண்களிடம் அந்தரங்க போட்டோஸ் வாங்கி மிரட்டல்.. ஷாக்கிங் சம்பவம்
புதுவை: ஃபேக் ஐடியில் உடலை ஃபிட் ஆக வைத்திருக்க டிப்ஸ் தருவதாக கூறி இளம்பெண்களிடம் அந்தரங்க புகைப்படங்களை வாங்கிய இளைஞர், தன்னுடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசாவிட்டால் இணையத்தில் புகைப்படங்களை வெளியிடுவதாக அந்த பெண்களை மிரட்டியுள்ளான்.
உடல் எடையை குறைத்து ஃபிட் ஆக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்களே இருக்க முடியாது. அதுவும் தற்போது வயது வித்தியாசம் இன்றி உடல் பருமன் பிரச்சினை அதிகரித்து வருவதால் இளம் பெண்கள் கூட பலரும் உடலை கட்டுக்கோப்பாக வைக்க மெனக்கெட வேண்டியுள்ளது. எப்போதும் இணையத்தில் மூழ்கி கிடக்கும் இன்றைய தலைமுறை இளம் பெண்கள், உடல் பருமனை குறைப்பது எப்படி என கூகுளில் தேடத்தொடங்கிவிடுகின்றனர்.

சமூக வலைத்தளங்களிலும் உடலை ஃபிட் ஆக வைத்திருப்பதற்கான ஆலோசனைகளை பலரும் வெளியிட்டு வருகின்றனர். இதில் ஒரு சிலர் தங்களை உடல் பயிற்சி நிபுணர்கள் போல காட்டிக்கொண்டு ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். இதை நம்பி சிலர் ஏமாந்து பணத்தையும் அந்தரங்க தகவல்களையும் இழந்து போகும் நிலை உள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது புதுவையில் நடைபெற்றுள்ளது.
பெண் உடல் பயிற்சி நிபுணர் என தன்னைக் காட்டிக்கொண்ட மோசடி பேர்வழி பெண்களின் அந்தரங்க போட்டோக்களை வாங்கிக் கொண்டு மிரட்ட தொடங்கியுள்ளார். இந்த திடுக்கிட வைக்கும் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- டயட் எதுவுமே தேவையில்லை.. நான் சொல்வதை மட்டும் பாலோ செய்தால் போது உடல் எடையை குறைத்து விடலாம் என சமூக வலைத்தளங்களில் பெண் ஒருவர் பெயரில் வீடியோ உலா வந்துள்ளது.
உடல் எடையை குறைத்து ஃபிட் ஆக இருக்க விரும்பிய பல பெண்களும் இந்த விளம்பரத்தை நம்பி, விளம்பரத்தில் உள்ள இன்ஸ்டாகிரம் பக்கத்தை பின் தொடர்ந்துள்ளனர். அப்போது அந்த அக்கவுண்டில் இருந்து பேசியதாக சொல்லப்படும் பெண் ஒருவர், " நான் கூறும் உடல் பயிற்சிகளை தவறாமல் மேற்கொண்டால் அழகிய உடல் அமைப்பை பெறலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் உங்கள் ஆடையில்லாத புகைப்படங்களை அனுப்பினால் அதற்கேற்றவாறு உடல் பயிற்சிகளை பரிந்துரை செய்கிறோம் என்று சொல்லியதாக தெரிகிறது.
இதனை அப்படியே நம்பிய சில பெண்கள், கொஞ்சம் கூட யோசிக்காமல் தங்கள் அந்தரங்க புகைப்படங்களை அந்த பெண் கூறிய இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். பெண் உடல் பயிற்சியாளர் தானே என நம்பி பெண்களும் யோசிக்காமல் அனுப்பியதாக தெரிகிறது. அடுத்த சில நாட்களில் தான், புகைப்படங்களை அனுப்பிய பெண்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
மற்றொரு இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து, உங்களின் அந்தரங்க புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. என்னிடம் நிர்வாணமாக வீடியோ காலில் பேச வேண்டும் இல்லையென்றால்.. இணையதளத்தில் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் ஷாக் ஆன அந்த பெண்கள், புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இன்ஸ்டாகிராமில் பெண் உடல் பயிற்சி நிபுணர் போல பேசி பெண்களிடம் அந்தரங்க புகைப்படங்களை வாங்கியது ஆண் என்பதை கண்டறிந்தனர். முத்தியால் பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் திவாகர் என்பவர் தான் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
சமூக வலைத்தளங்களில் முன்பின் தெரியாத நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் தங்களின் தனிப்பட்ட விவரங்கள் எதையும் பகிரக் கூடாது என்று வலியுறுத்தும் போலீசார், கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் இதுபோன்ற ஆபத்துக்களில் தானாக போய் சிக்கிக் கொள்வது போல அமைந்து விடும் என்று எச்சரிக்கின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications