ஷிவானிதான் வேண்டும்.. அடம் பிடித்த திலீப்.. மறக்க முடியவில்லை.. ஆளுக்கு ஒரு கயிறு.. 2 தற்கொலைகள்!
திருநங்கையுடன் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்
புதுச்சேரி: திருநங்கை ஷிவானிதான் வேண்டும் என்று அடம்பிடித்தார் திலீப்.. கடைசியில் ஒரே ரூமில் ஆளுக்கு ஒரு பக்கம் ஷிவானியும், திலீப்பும் தூக்கு போட்டு தொங்கிவிட்டனர்.. இது சம்பந்தமாக காரைக்கால் போலீசார் விசாரித்து வருகிறார்கள்!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் திலீப்.. 26 வயதாகிறது.. நிரவி பகுதியை சேர்ந்த ஷிவானி என்பவரை திலீப் காதலித்தார்.. ஷிவானி ஒரு திருநங்கை.. 30 வயதாகிறது!!

இவர்களுக்குள் 6 மாதத்துக்கு முன்புதான் பழக்கம் ஏற்பட்டது.. எடுத்த எடுப்பிலேயே லவ் வந்துவிட்டது.. இந்த விஷயம் திலீப் வீட்டிற்கு தெரிந்துவிட்டது.. ஒரு திருநங்கையை மகன் காதலிப்பதை அவர்கள் ஏற்கவே இல்லை. அதனால் மகனை கண்டித்துள்ளனர்.
ஆனால் ஷிவானியை அவ்வளவு எளிதாக திலீப்பால் மறக்க முடியவில்லை.. எனவே, கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார்.. ஷிவானியை அழைத்து கொண்டு காரைக்கால் ஒடுதுறை பகுதியில் தனியாக ஒரு வீடு எடுத்து இருவரும் வசித்து வந்தனர்.
என்ன ஆச்சோ தெரியவில்லை.. ஆசை ஆசையாக காதலித்து வந்தவர்கள், தனிக்குடித்தனம் வந்தபிறகு சண்டை போட ஆரம்பித்துவிட்டனர்.. அடிக்கடி தகராறு வந்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் இன்று காலை 2 பேருமே வீட்டில் பிணமாக கிடந்தனர்.
ஆளுக்கு ஒரு பக்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.. தகவலறிந்த நிரவி போலீசார் விரைந்து சென்று 2 சடலங்களையும் கைப்பற்றி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.
யார் யாரை கொன்றார்கள்? திலீப்பை கொலை செய்துவிட்டு ஷிவானி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது 2 பேருமே ஒன்றாக தூக்கில் தொங்கினார்களா என தெரியவில்லை.. இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை.. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications