திடீர் திருப்பம்.. தைலமரக் காட்டில் மகளை நரபலி கொடுத்த தந்தை.. நடந்தது என்ன.. கந்தர்வகோட்டை பயங்கரம்

13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: தைல மரக்காட்டில் 13 வயது சிறுமியை அடித்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. பெற்ற மகளை தந்தையே நரபலி கொடுத்து கொன்றது அம்பலமாகி உள்ளது.. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Recommended Video

    13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம்.. இவருக்கு 55 வயது.. இவரது மனைவி இந்திரா.. இவர்களது 13 வயது மகள்தான் வித்யா.

    தச்சங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.. லாக்டவுனில் ஸ்கூல்களுக்கு லீவு விடப்பட்டதால், வீட்டிலேயே இருந்து வந்தார்.

     கிணறு

    கிணறு

    இந்நிலையில், 15 நாட்களுக்கு முன்பு இவர்களின் கிராமத்தை ஒட்டி பாப்பான்குளம் என்ற பகுதி உள்ளது.. அங்குள்ள குளத்துக்கு அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சிறுமி சென்றிருக்கிறார்.. அப்போது மர்மநபர்கள் சிறுமியை தைல மரக்காட்டிற்கு தூக்கி சென்றுள்ளனர்.

     படுகாயங்கள்

    படுகாயங்கள்

    இந்த பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் தைல மரக்காடு உள்ளது. காட்டுக்குள் சிறுமி செல்வதை பார்த்து பின்தொடர்ந்து வந்துள்ளனர் போல தெரிகிறது... சிறிது நேரம் கழித்து, சிறுமி தைலமரக்காட்டில் படுகாயங்களுடன் விழுந்து கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் சொன்னார்கள்.

     சிறுமி சடலம்

    சிறுமி சடலம்

    அவர்கள் விரைந்து வந்து பெண்ணை மீட்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. தீவிரமான சிகிச்சை தரப்பட்டும் சிறுமி பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை போலீசார் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பினர்.

     போஸ்ட் மார்ட்டம்

    போஸ்ட் மார்ட்டம்

    சிறுமியை கொன்றது யார் என்ற விசாரணையிலும் இறங்கினர்.. தைல மரக்காட்டில் பெண்ணை பலாத்காரம் செய்ததால்தான், உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டு இறந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்ததில் சிறுமியை யாரும் பலாத்காரம் செய்யவில்லை என தெரியவந்தது. ஆனால் உடம்பில் உள்ள ரத்த காயங்களை பார்த்தால், அடித்தே கொன்றுள்ளனர் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

     குடும்ப பகையா?

    குடும்ப பகையா?

    அவர்கள் யார் என கண்டுபிடிக்க 6 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.. 13 வயது சிறுமியுடன் யாருக்கும் முன் பகை இருக்க வாய்ப்பில்லை என்பதால், சிறுமி குடும்பத்துடன் வேறு யாருக்காவது பகை இருந்ததா, அதற்காக பழிவாங்கவே அவர்கள் வீட்டு பெண்ணை இப்படி அடித்து போட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இப்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் தந்தையே மரணத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

    ஜோசியம்

    ஜோசியம்

    சிறுமியின் தந்தைக்கு ஜோசியத்தில் அதிக நம்பிக்கை இருந்துள்ளது.. எப்படியாவது பணக்காரர் ஆக வேண்டும் என்ற பேராசையும் இருந்துள்ளது.. இந்த சமயத்தில்தான் மந்திரவாதி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அந்த நபரோ, சிறுபெண்ணை நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்று அளந்து விட்டுள்ளார்.. இதற்காகவே பெண்ணை மந்திரவாதியிடம் தந்தை அழைத்து சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

     வாக்குமூலம்

    வாக்குமூலம்

    போலீசாரிடம் அவர் சொன்னபோது, "நான் கட்டிட வேலை பார்க்கிறேன்.. எனக்கு மூணுமே பெண் குழந்தைங்கதான்.. ஆண் வாரிசு இல்லையேன்னு கவலை இருந்தது.. அப்பதான் என் ஃபிரண்ட் மூலமா மந்திரவாதியை போய் பார்த்தேன்.. மகளை நரபலி கொடுத்தால், ஆண் வாரிசு உருவாகும், அத்துடன் புதையலும் சேர்ந்து கிடைக்கும்ன்னு சொன்னார். அதனால், தண்ணி எடுக்க 3வது மகளை காட்டுக்கு அனுப்பி கொன்றேன்" என்றார்.

     5 பேர் கைது

    5 பேர் கைது

    இதையடுத்து, இது தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் 3 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. ஆனால் அந்த மந்திரவாதியை காணோம்.. தலைமறைவாக உள்ள அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். ஆண் வாரிசுக்காகவும், சொத்து சேரும் என்பதற்காகவும் பெற்ற மகளை நரபலி தந்த இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+