மந்திரவாதி வசந்தி.. கொடூர மூக்காயி.. 13 வயது சிறுமியை நரபலி தந்த பெண்கள்.. கதிகலங்கும் கந்தர்வகோட்டை

13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை, போலீசில் பகீர் வாக்குமூலம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: பெற்ற மகளை நரபலி தந்ததைவிட, அந்த நரபலியை ஏன் தந்தேன் என்று தகப்பன் சொன்ன வாக்குமூலம் மேலும் அதிர்ச்சியை தந்துள்ளது.. 13 வயது குழந்தையை நரபலி தந்த கந்தர்வகோட்டை பயங்கரத்தில் இருந்தும், அதிர்ச்சியில் இருந்தும் நம் மக்கள் இன்னும் மீளவே இல்லை!

Recommended Video

    13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை

    கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம்.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி.. 55 வயதாகிறது.. இவரது மனைவி இந்திரா.. 3 மகள்கள் இருக்கிறார்கள்.. இதில் 3 வது மகள்தான் 13 வயது வித்யா.

    தச்சங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மகள் 15 நாட்களுக்கு முன்பு தைல மரக்காட்டில் உயிருக்கு போராடி கொண்டிருந்தாள். தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.. சிறுமியின் உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன.. அதனால் இது கண்டிப்பாக பாலியல் பலாத்காரமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

    பலாத்காரம்

    பலாத்காரம்

    பிறகுதான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று வந்தது.. அதனால் இந்த மரணம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அப்படியென்றால் 13 வயது சிறுமியை அடித்து கொல்லும் அளவுக்கு வெறிபிடித்த மிருகம் யார் என்ற விசாரணை தீவிரமானது.. உடனடியாக 6 தனிப்படைகளை நம் போலீசார் அமைத்தனர்.. கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகுதான் இதன் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டது.. பெற்ற தந்தையே மகளை கொன்றது அம்பலமானது.

    மூக்காயி

    மூக்காயி

    அவரை விசாரித்த போலீசார் சற்று மிரண்டே போனார்கள்.. பன்னீர்செல்வத்துக்கு 55 வயதாகிறது.. இவருக்கு 2 மனைவிகள்.. முதல் மனைவி இந்திரா, அவருக்கு வித்யா உட்பட 3 குழந்தைகள் உள்ளனர்.. 2வது மனைவி மூக்காயி.. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    பேராசை

    பேராசை

    ஆனால் ஆண் குழந்தை ஒன்றுகூட இல்லையே என்ற ஏக்கம் பன்னீர்செல்வத்துக்கு இருந்து கொண்டே இருந்துள்ளது.. இன்னொரு பக்கம் வறுமையில் வாழ பன்னீர்செல்வத்துக்கு விருப்பம் இல்லை.. அதனால் திடீர் பணக்காரனாக வேண்டும் என்ற பேராசையும் எழுந்துவிட்டது. அப்போதுதான் ஒரு பெண் மந்திரவாதியின் தொடர்பு கிடைத்துள்ளது.. நரபலி தந்தால் பணக்காரனாகலாம், ஆண் வாரிசும் கிடைக்கும் என்று சொல்லவும்தான் வித்யாவை நரபலி தர முடிவு செய்தார்.

    சிறப்பு பூஜைகள்

    சிறப்பு பூஜைகள்

    இதற்கு 2வது மனைவியும் கூட்டு என்பது அதிர்ச்சி.. காரணம், முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைதான் வித்யா. நரபலி தந்தால் பணம் பெருகும், மாந்திரீக சக்தியும் கிடைக்கும் என்று அந்த பெண் மந்திரவாதி ஆசை வார்த்தை சொல்லி கொண்டே இருக்கவும்தான், 2வது மனைவி மூக்காயியுடன் சேர்ந்து சம்பவம் நடந்த அன்று விடிகாலை காட்டுப்பகுதியில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தியுள்ளார்.. அன்று மாலை தண்ணீர் பிடிக்க வந்த மகள் வித்யாவை வழிமறித்து நரபலி தருவதற்காக கழுத்தை பிடித்து இழுத்து சென்றுள்ளனர்.. சரமாரியாக தாக்கியும் உள்ளனர்.

    நாடகம்

    நாடகம்

    மகள் இறந்து விட்டதாக நினைத்து அவர்கள் அங்கேயே அவள் உடலை போட்டுவிட்டு வீட்டிற்கும் சென்றுவிட்டனர். ஆனால், சிறுமி இறக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.. அதனால் பெற்ற தகப்பனும், மூக்காயியும் சேர்ந்து, மகளை யாரோ பலவந்தப்படுத்திவிட்டதாக நாடகமாடினர்.. அடித்து போட்டுவிட்டதாக ஒப்பாரி வைத்தனர்.. தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கும் தூக்கி கொண்டு ஓடினர்.. அங்கு மகள் இறந்தபிறகே பெற்ற தந்தைக்கு நிம்மதி ஆகிஉள்ளது.

    பெண் மந்திரவாதி

    பெண் மந்திரவாதி

    இப்போதைக்கு பன்னீர்செல்வமும் உட்பட 5 பேர் கைதாகி உள்ளனர்.. ஆனால் இது எல்லாத்துக்கும் காரணமான அந்த மந்திரவாதியையும் காணோம்.. அவர் பெயர் வசந்தி.. தலைமறைவாகி உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.. அதேபோல மூக்காயியும் எங்கே என்றே தெரியவில்லை என்பதால் அவரை தேடினர்.

    ரகசியங்கள்

    ரகசியங்கள்

    அப்போதுதான் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியானது.. 10 நாளைக்கு முன்பே மூக்காயி இறந்துவிட்டாராம்.. இவர் எப்படி இறந்தார் என்றே இன்னமும் விளங்கவில்லை.. ஆண் வாரிசு ஆசை, குபேரனாகும் பேராசைக்காக மகளை நரபலி கொடுத்தது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இப்போது மூக்காயி மரணமும் மேலும் மர்மத்தை கூட்டி உள்ளது.. கந்தர்வகோட்டை பயங்கரத்தின் இந்த ரகசியங்களை நம் போலீசார் நிச்சயம் வெளிக்கொணருவார்கள் என்றே நம்பப்படுகிறது!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+