நாடாளுமன்ற தேர்தலையும், இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்துங்க.. எச்.ராஜா ஐடியா!
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video

புதுக்கோட்டை: நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, இடைத்தேர்தலை தனியாக நடத்தினால் வாக்காளர்களுக்கு நிறைய பேர் பணம் கொடுப்பார்கள். இது பெரிய முறைகேட்டிற்கு வழிவகுக்கும்.

ஆகவே, நாடாளுமன்ற தேர்தலுடன், 20 தொகுதி இடைத்தேர்தலை நடத்தினால் ஆரோக்கியமானதாக இருக்கும். பணப் பலம், ரூ.20 டோக்கனை கொடுத்து ஜெயிப்பது என்பது நடக்காது. இதனை ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே கூறி வருகிறேன்.
தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தை பின்பற்ற வேண்டும். இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற பிரகாசமாக வாய்ப்பு இருக்கிறது. கூட்டணி வைப்பது குறித்து பிறகு முடிவு செய்வோம்.
இதற்கிடையே, தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது. முன்னதாக, புயலை காரணமாக காட்டி தமிழக தலைமைச் செயலர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியதால், தற்போதைய 5 மாநில தேர்தல்களுடன் இடைத் தேர்தலை சேர்த்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications