முடிவுக்கு வந்த களேபரம்.. 2023ல் முதல் ஜல்லிக்கட்டு.. நாளை தச்சங்குறிச்சியில் சீறிப்பாயும் காளைகள்!
புதுக்கோட்டை: தமிழகத்தில் 2023ல் முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தான் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நடவடிக்கைகளை சரியாக செய்யவில்லை எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கும் நிலையில் பிற இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. கட்டுக்கடங்காமல் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, காளையர்கள் வீரத்துடன் மடக்கி பிடிப்பதை பார்ப்பதே தனி சுகம் தான்.

முதல் ஜல்லிக்கட்டு
இந்நிலையில் தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பீட்டா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தான் தமிழகத்தில் மதுரை உள்பட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கி உள்ளன. இந்நிலையில் 2023ல் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திட்டமிட்டப்படி அந்த போட்டி நடக்கவில்லை.

முன்னேற்பாடு நடவடிக்கை
அதாவது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டமாக ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இந்த ஆண்டும் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதமாக ஜல்லிக்கட்டு குழுவினர் மாவட்ட நிர்வாகம், கால்நடை துறையின் அனுமதி கிடைத்தது. இதைடுத்து ஜல்லிக்கட்டு குழுவினர் அரசு கூறி இருந்த கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த முன்னேற்பாடுகளை செய்து வந்தனர்.

அனுமதி மறுப்பு - போராட்டம்
இந்நிலையில் தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடத்தை கலெக்டர் கவிதாராமு, போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், கால்நடை அலுவலர் உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது. மாற்று தேதயில் ஜல்லிக்கட்டு நடத்த அறிவுறுத்தப்பட்டது.

நாளை ஜல்லிக்கட்டு
இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் காளைகளை மைதானத்தில் அவிழ்த்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தச்சங்குறிச்சியில் ஜனவரி 8 ம் தேதியான நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 2023ல் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications