பொங்கலுக்கு ரூ.3,000 கொடுக்கிறார்கள்.. கடந்த ஆண்டில் ஏன் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.. அண்ணாமலை!
புதுக்கோட்டை: கடந்த பொங்கலுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காத தமிழக அரசு, தேர்தல் ஆண்டில் ரூ.3 ஆயிரம் கொடுப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2021ல் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலையொட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் நிறைவு விழா புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்திவயலில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார். இந்த நிறைவு விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பாஜகவினர் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கூற தொடங்கிவிட்டனர். இன்னும் தேர்தலுக்கு 90 நாட்கள் மட்டுமே இருக்கிறது. மக்களுக்கான மாற்று சக்தியாக என்டிஏ கூட்டணி உள்ளது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வீதியில் பெண்கள் நடமாட முடியவில்லை.
காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. முதல்வர் ஸ்டாலின் எதுவுமே தெரியாமல் 4.5 ஆண்டுகளை கழித்துவிட்டார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தால், நாம் வரிசையில் நின்று அவர்களுக்கு ஓட்டு போட்டுவிடுவோம் என்ற எண்ணம். 2021ல் ஒரு ரேஷன் கார்டு மீது ரூ.2.04 லட்சம் கடன் இருந்தது.
தற்போது ஒரு ரேஷன் கார்டு மீது இருக்கும் கடன் ரூ.4.54 லட்சம். இப்படி கடனை ஏற்றிக் கொண்டு கடந்த பொங்கலின் போது ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. தற்போது தேர்தல் ஆண்டில் ரூ.3 ஆயிரம் கொடுக்கிறார்கள். இந்தக் கடனை நாமும், நமது குழந்தைகளும் தான் கட்ட வேண்டும். ஆட்சிக்கு வந்தபின் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள்.
2021 தேர்தலின் போது திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் 80 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றவிட்டோம் என்கிறார்கள். ஆனால் 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. அப்படி வாக்குறுதி நிறைவேற்றி இருந்தால், வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள். தமிழ்நாட்டிற்கு வரக் கூடிய முதலீடுகள் ஆந்திராவுக்கு செல்கிறது.
வசூல் வேட்டை நடத்தி கொண்டிருக்கிறார்கள். கம்பெனி கட்டி கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாகவே நமக்கு வர வேண்டிய மாநிலங்கள், வேறு மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒருங்கிணைப்பாக உறுதியாக நாம் களத்தில் இருந்தால், நிச்சயமாக ஆட்சி மாற்றம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர்












Click it and Unblock the Notifications