புதுக்கோட்டையிலிருந்து அருணா அதிரடி.. ரூ.1000 வந்ததா? சென்னையிலும் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அரசு துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழக அரசு உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை துவங்கி நடத்தி கொண்டிருக்கிறது.. கடந்த ஜூலை 15ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் இன்றைய தினம் நடக்க போகும் முகாம் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 15ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை ,வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சிறுபான்மையினர் துறை , வருவாய்த்துறை என 40-க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் சேவைகளை மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இந்த முகாம்கள் வாயிலாகவே பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரூ.1000 பெரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக சேர எண்ணுபவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000
இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களிலும் ஏராளமான பெண்கள் மகளிர் உரிமை தொகையை கோரி விண்ணப்பம் செய்தள்ளனர்.. அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் இந்த விண்ணப்பங்கள் மீதான முடிவு தெரிந்துவிடும் என தமிழக அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளது.. அந்தவகையில், கடந்த ஜூலை 15ம் தேதி முதல் நாள் முகாமில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கெல்லாம் 45 நாட்கள் கழித்து அதாவது இந்த மாத இறுதிக்குள் மகளிர் உரிமை தொகை கிடைக்குமா கிடைக்காதா என்பது தெரிய வந்து விடும்.
இந்நிலையில் இன்றும்கூட, சென்னை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நாளை (19.08.2025) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-9ல் திருவொற்றியூர் நெடுஞ்சாசாலையில் உள்ள கௌரி ஆசிரமம், மாதவரம் மண்டலம், வார்டு-23ல் மேற்கு காவாங்கரையில் உள்ள ராணி சங்குபதி திருமண மண்டபம், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-36ல் வியாசர்பாடி, 2வது பிரதான சாலை, சர்மா நகரில் நடைபெறுகிறது.
அதேபோல ராயபுரம் மண்டலம், வார்டு-52ல் பழைய வண்ணாரப்பேட்டை, மொட்டை தோட்டத்தில் உள்ள ஃபரூக் மஹால், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-78ல் புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள லட்சுமி மஹால், அம்பத்தூர் மண்டலம், வார்டு-81ல் எஸ்.எம்.கே. திருமண மண்டபம், அண்ணாநகர் மண்டலம், வார்டு-104ல் அண்ணாநகர் மேற்கு, என்.வி.என். நகர், ஜவஹர்லால் நேரு 100 அடி சாலையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பிலும் முகாம் நடக்கிறது.
பூந்தமல்லி, தேனாம்பேட்டை
அதேபோல, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-113ல் தியாகராய நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள எஸ்.சி.எஸ். சபா, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142ல் சைதாப்பேட்டையில் உள்ள ராஜ் திரையரங்கம், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-147ல் கங்கா நகர், மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள ஹனு ரெட்டி கார்டன், ஆலந்தூர் மண்டலம், வார்டு-158ல் நந்தம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி, சென்னை வர்த்தக மையம் எதிரிலுள்ள ஐடிபிஎல் நிலம், அடையாறு மண்டலம், வார்டு-174ல் பெசன்ட் நகர், சாஸ்திரி நகர், 5வது குறுக்குத் தெருவில் உள்ள சமுதாயக் கூடம் ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அருணா அதிரடி
புதுக்கோட்டை மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் இன்று நடைபெற உள்ளன என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.. மாநகராட்சி, 18-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தொண்டைமான் நகர் சமுதாயக் கூடத்திலும், அரிமளம்-4 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு பிலியவயல் ஊராட்சி, வம்பரம்பட்டி சமுதாயக் கூடத்திலும், அறந்தாங்கி - 6 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சியில் உள்ள வசந்தம் திருமண மண்டபத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளன.
மேலும், விராலிமலை - 9 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு இலுப்பூர் தாலுகா, மருதம்பட்டி கிராம சேவை மையக் கட்டிடத்திலும், பொன்னமராவதி - 5 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு ஒலியமங்கலம் - வேங்கம்பட்டி மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்திலும்; ஆவுடையார்கோவில் - 6 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு திருப்புனவாசல் உமையாள் திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது என்று கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications