ஜல்லிக்கட்டு.. சொத்துக்குவிப்பு வழக்கு.. விஜயபாஸ்கர் ரொம்ப பிஸி.. ஜன.11 முதல் விறுவிறு வாதங்கள்
புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்கள் புடை சூழ அவர் ஆஜரான நிலையில் ஜனவரி 11 முதல் வாதங்கள் நடைபெற உள்ளது.
கடந்த 2011, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்நிலையில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 60 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளதுடன் அவர் மற்றும் அவரது மனைவியின் மீது எப்ஐஆர் பதிவு செய்யதுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரின் வீடு, அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர்.
திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவக்கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். காவல்துறையினர் சோதனை நடத்தி பல மாதங்களுக்குப் பிறகு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விஜயபாஸ்கர் மீது 216 பக்கத்திலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தொடர் பணிகளும், பயண அலைச்சல்களும்
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) January 5, 2024
இடைவிடாது தொடர்ந்தாலும்,
இல்லத்துப் பிள்ளைகளைக் கண்டால்
இதயமும் குளிர்ந்து விடும்…
நம் ஊனில், உயிரில், உதிரத்தில்
கலந்திருக்கும் வீர விளையாட்டாம் #ஜல்லிக்கட்டு -க்கு பேர் சொல்லும் பிள்ளைகளாம் ‘செல்லக் காளைகளை’ களத்திற்கு தயார் செய்த… pic.twitter.com/zpvY4plToL
ஒருபுறம் அரசியலில் இருந்தாலும் மாடுகள் வளர்ப்பில் தீவிர ஆர்வமுள்ள விஜயபாஸ்கர், தற்போது தனது காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார்ப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்று நடைபெறும் புதுக்கோட்டை தச்சன் குறிச்சி ஜல்லிக்கட்டிலும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான காளை களமிறங்கியுள்ளது
இந்த நிலையில் வழக்கு நீதிபதி பூரண ஜெய ஆனந்த் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர்கள் கூட்டத்தோடு விஜயபாஸ்கர் நீதிபதி முன்பாக ஆஜரானார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை வரும் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் மேற்கொண்டு வாதங்கள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications