புதுக்கோட்டையில் பதற்றம்.. தேர் திருவிழாவில் இருதரப்பு மோதல்! அரிவாள்வெட்டு - வீடுகளுக்கு தீவைப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கோவில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் இடையே இன்று இரவு கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மொத்தம் 6 பேர் காயமடைந்த நிலையில் குடிசை வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதோடு, பைக்குகளும் தீவைத்து எரிக்கப்பட்டது. அதோடு அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில் அதிரப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு என்ற கிராமம் உள்ளது. இங்கு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கோவிலின் திருவிழா என்பது தொடங்கியது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழா என்பது பிரசித்திப்பெற்றது. அதன்படி இன்று இரவு தேர் திருவிழா தொடங்கி நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேர் திருவிழா அமைதியாக முடிவடைந்தது.
இதையடுத்து அனைவரும் கோவிலில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். வடகாடு தெற்கு ஆர்ச் அருகே நின்ற சில இளைஞர்களுக்கும், இன்னொரு பிரிவை சேர்ந்த இளைஞர்களுக்கு திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் லேசாக ஏற்பட்ட வாக்குவாதம் நேரம் ஆக ஆக அதிகமானது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது.
இதையடுத்து இருதரப்பினரும் மாற்றி மாற்றி தாக்கி உள்ளனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இதற்கிடையே அந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் தங்களின் தரப்புக்கு ஆதரவாக சிலரை அழைத்து கொண்டு தாக்கி நபர்கள் இருக்கும் இடத்துக்கு சென்றனர். அங்கு இருதரப்பு மோதல் என்பது தீவிரமானது.
ஒரு தரப்பினர் அரிவாளை எடுத்து 2 பேரை வெட்டி உள்ளனர். இவர்கள் உள்பட மொத்தம் 6 பேர் காயமடைந்தனர். இதற்கு பழித்தீர்க்கும் வகையில் இன்னொரு தரப்பினர் குடிசைகளுக்கு தீவைத்துள்ளனர். அதோடு 2 பைக்குகளுக்கு தீவைத்து எரித்தனர். மேலும் பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இதனால் வடகாடு கிராமம் பெரும் பதற்றத்துக்கு உள்ளானது. இதுபற்றி தகவலறிந்ததும் போலீசார் வந்து தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க மாவட்ட எஸ்பி அபிசேக் குப்தா தலைமையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications