எடப்பாடி முதல் ராஜேந்திர பாலாஜி வரை! அதிமுக தலைவர்களை தரக்குறைவாக விமர்சித்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
புதுக்கோட்டை: அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்பட பல தலைவர்களை தரக்குறைவாக திமுகவின் மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோ சர்ச்சையாகி உள்ளது.
திமுகவின் மேடை பேச்சாளராக இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் பிற கட்சியில் உள்ளவர்களை தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் பாஜகவில் இருந்த நடிகைகள் பற்றி பேசியது சர்ச்சையானது.

நடிகை குஷ்பு புகாரில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வந்தவர் இன்னும் மாறவில்லை. தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருகிறார்.
அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது புதுக்கோட்டை மாநகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. புதுக்கோட்டையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அதிமுக தலைவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்தார். எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: கொரோனா காலத்தில் பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் என்ன செய்தனர்? சிரிக்காத.. நீ பன்னீர் செல்வம் அய்யனார் சாமி மாதிரியே இருப்பார். பழனிச்சாமி ஹோட்டல் மேனேஜர் மாதிரியே இருப்பார். இந்த மதுரையில் ஒருத்தர் இருக்கார் பாரு. அவர் பேரு என்ன செல்லுர் ராஜூவா? அப்படியே கிளி ஜோசியக்காரன் மாதிரியே இருப்பார்.
உங்க ஊரில் (புதுக்கோட்டை) ஒருத்தர் இருக்கார் பாரு. டேய், நான் கூட பார்த்து இருக்கேன். பாஜகவில் கஞ்சா விற்கும் அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உள்ளே இருக்கா. திருட்டு பய தெருப்பொறுக்கி எல்லாம் செய்யுற வேலையை இவர் (மறைமுகமாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறிப்பிடுகிறார்) செஞ்சி இருக்கார்'' என்று பேசியுள்ளார்.
இதுதவிர ராஜேந்திர பாலாஜியை இன்னும் மோசமாக நாயுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்தார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வரும் நிலையில் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications