17000 பக்கம் குற்றப்பத்திரிக்கை.. விஜயபாஸ்கரை விடாத சொத்து வழக்கு.. 31-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீஸ் தொடர்ந்த வழக்கு ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான, சி.விஜயபாஸ்கர் மீது கடந்த 2016 - 2021 வரை ஆறு ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீதம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்.

விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது 2021, அக்டோபர் 17ஆம் தேதி பதியப்பட்ட இந்த வழக்கு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் தலா 17ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருவரிடமும் வழங்கப்பட்டன. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஒரு சில நகல்கள் விடுபட்டுள்ளதாக, விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தார்கள்.இதனையடுத்து விடுபட்ட நகல்களை ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த டிசம்பர் 2ஆம் தேதி, விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யாவுக்கு 17ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒப்படைத்தனர். இதை இருவரிடமும் மீண்டும் ஒப்படைப்பதற்கு சம்மதம் தெரிவித்து அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள். இதனிடையே விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய் ஆனந்த், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீண்டும் வழங்கிய தலா 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்களை, விஜயபாஸ்கர் வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து, கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவர்களுக்கு பதில் விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, பூரண ஜெய் ஆனந்த் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி, நீதிபதி உத்தரவின் பேரில், வழக்கறிஞர்கள் படை சூழ வழக்கின் விசாரணைக்காக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , கடந்த ஜனவரி 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதி வழக்கை மீண்டும் வரும் ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதன்படியே இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கு வரும் ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!












Click it and Unblock the Notifications