மன்னிப்பு கேட்ட அமித்ஷா. புதுக்கோட்டை மேடையில் கைக்கூப்பி தலைக்குனிந்து சொன்ன வார்த்தை.. என்ன நடந்தது?
புதுக்கோட்டை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட ‛தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற யாத்திரை பிரசாரத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று புதுக்கோட்டையில் நடந்தது. அதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கைக்கூப்பிப அனைவரிடமும் மன்னிப்பு கோரிய நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

‛தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட யாத்திரை பிரசார கூட்டத்தின் நிறைவு விழா புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்து வயலில் நடைபெற்றது.
இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் உள்பட பிற முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் அமித்ஷா பேசியதாவது:
‛‛மாபெரும், மகத்தான, பழமையான, தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை அதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தமிழ்நாட்டின் புனித மண்ணுக்கு என்னுடைய நல் வணக்கங்களை தெரிவித்து உரையை தொடங்குகிறேன். ‛தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற இந்த பயணத்தை மேற்கொண்ட நயினார் நாகேந்திரன் நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஏப்ரல் மாதம் 26ம் தேதி பாஜகவின் என்டிஏ தலைமையிலான ஆட்சி அமையும்.
மாபெரும் அவையின் வாயிலாக தமிழக மக்களுக்கு அறைக்கூவல் விடுக்கிறேன். வாருங்கள் பிரதமர் மோடியின் லைமையில் அணிவகுப்போம். பாரதத்தின் வளர்ச்சி பயணத்தில் பங்கு பெறுவோம். தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் அக்டோபர் 12ம் தேதி தொடங்கியது. அனைத்து மட்ட மக்களோடு தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் பாஜகவும், அதிமுகவும் இன்னும் பிற கூட்டணி கட்சிகளும் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க போகிறோம் எப்பாடுபட்டாவது திமுகவின் ஆட்சியை ஒழித்தே தீருவோம். தமிழ் மொழியை வளர்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை. தேர்வுகளை தமிழில் எழுதும் வசதிகளை பாஜக ஏற்படுத்தி உள்ளது'' என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா?












Click it and Unblock the Notifications