20 வருஷமா தலைவர் கூட இருக்கேன்.. எல்லாம் இறைவனுக்கு தெரியும்.. அமைச்சர் பர்வேஸ்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்தும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லி உள்பட நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கடைசி படம்ன ஜனநாயகன் வெளியாகியுள்ளது. போராட்டத்தை நீர்த்து போகும் வகையில் ஜனநாயகன் பட கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அமைச்சர்கள் பலரும் அந்தப் படத்தை கண்ணீருடன் பார்த்தது சர்ச்சையானது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் ஜனநாயகன் படத்தை அழுதுபடி பார்த்து விமர்சனமானது. இதுகுறித்து பர்வேஸ் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் பர்வேஸ் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஜனநாயகன் படம் பார்க்கும் போது நான் உணர்வுபூர்வமாக கண்ணீர் விட்டதை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதை நான் எல்லோரிடமும் பகிர நினைத்தேன். நான் கடந்த 2006 ஆம் வருடத்தில் இருந்து தலைவரின் ரசிகன். என்னுடைய 11 வயதில் இருந்து அவரின் ரசிகனாக உள்ளேன். அவருடனே இருந்து அவருடன் இந்த 20 வருடங்களாக பயணித்துள்ளேன். கட்சி ஆரம்பித்தவுடன் இணைந்து பயணிக்க தொடங்கியவன் இல்லை.

Parvesh Jananayagan

இறைவனுக்கு தெரியும்

ரசிகர் மன்றமாக இருந்தோம், மக்கள் இயக்கமாக மாறினோம், அதன் பிறகு கட்சியாக பரிணாமித்துள்ளோம். அவர் படத்தை வைத்தே நான் மாமன்றத்தில் உள்ளே சென்றவன். கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நான் கவுன்சிலரானவன். கட்சி ஆரம்பித்து தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனோம். இப்போது மந்திரியாக உள்ளோம். எம்எல்ஏ, மந்திரி எல்லாமே அவரை வைத்து கிடைத்த பதவிகள் தான். இப்பேற்பட்ட தலைவருடன் இருக்கிறோம்.

அவரின் கடைசி படம் தியேட்டரில் பார்க்கிறோம் என்றவுடன், மனம் மிகவும் நொந்து இயற்கையாக கண்ணீர் வந்தது. இது மிகவும் இயற்கையானது. ஏதோ செயற்கையாக எல்லாம் அழுகவில்லை. எல்லோரையும் மீறி கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். நான் செயற்கையாக அழுதேனா, இயற்கையா என்பது இறைவனுக்கு தெரியும். எதிர்க்கட்சிகள் என்றாலே விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அவர்கள் என்ன பாராட்டவா போகிறார்கள். நாங்கள் எப்போதும் போல மக்கள் பணி செய்வோம்" என்றார். பர்வேஸின் பதிலும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+