Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சபரீசன்".. சுட்டெரிக்கும் சூரியன்.. அன்னைக்கு ஆற்காடு வீராசாமி, இப்போ?.. எகிறிய விஜயபாஸ்கர்.. ஏன்?

இதுதான் திராவிட மாடலா என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: நேற்றைய தினம் இரண்டு அதிமுக மாஜி அமைச்சர்கள் பேசிய பேச்சு, திமுக தரப்புக்கு எரிச்சலை மூட்டிக் கொண்டு வருகிறது.

திமுகவை டேமேஜ் செய்யும் முயற்சியை அதிமுகவும், பாஜகவும் தொடர்ந்து கையில் எடுத்து வருகின்றன.. தமிழக பாஜகவுக்கு இது ஒரு அஜெண்டாவாகவே மாறிவிட்டது.. அண்ணாமலை செல்லுமிடமெல்லாம் திமுகவை விமர்சித்து வருகிறார்.

அதேபோல, ஊழலில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விடாமல் சொல்லி வருகிறார். மற்றொரு பக்கம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து, ஓபிஎஸ் அறிக்கை விட்டு கேள்வி கேட்டு வருகிறார்..

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

இந்த சமயத்தில் மேலும் 2 மாஜி அமைச்சர்கள், மேடை போட்டு திமுகவை விமர்சித்து கிண்டலடித்துள்ளனர்.. ஒருவர் சி.விஜயபாஸ்கர், இன்னொருத்தர் சிவபதி.. புதுக்கோட்டை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சிவபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, விஜயபாஸ்கரும், சிவபதியும் பேசியது இதுதான்:

 சுட்டெரிக்கும் சூரியன்

சுட்டெரிக்கும் சூரியன்

"எவ்வளவு வெயில் பார்த்தீங்களா? பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கம், நைட் நேரத்திலும் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது... அப்படித்தான் இப்போ இருக்கிற ஆட்சியும் மக்களை வாட்டி வருகிறது..,. சூரியன் சுட்டெரிக்கிறது நமக்கு மட்டுமல்ல, திமுககாரர்களுக்கும்தான்.. தமிழ்நாட்டில் ஏன் இந்த ஆட்சி வந்தது என்று அவங்க கட்சிக்காரர்களே புலம்புற அளவுக்கு நிலைமை வந்துவிட்டது.. பொதுவாக ஒரு நல்ல ஆட்சி என்றால், மக்களைப் பாதுகாக்கும் குடையாக இருக்க வேண்டும்.. அதாவது நிழல் கொடையாக இருக்க வேண்டும்.

 திராவிட மாடல்

திராவிட மாடல்

இவங்க அன்னைக்கு என்ன சொன்னாங்க? நகை கடன் தள்ளுபடி 36 லட்சம் பேருக்குன்னு சொன்னாங்களே.. இப்போ யாருக்குமே தள்ளுபடி செய்யவில்லை.. அதனால்தான் பொதுமக்கள் மிகப்பெரிய கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று தொடங்கப் பெற்ற எல்லா திட்டங்களையும் இவங்க வந்து நிறுத்திட்டாங்க.. திமுகவுக்கு அன்னைக்கு ஒரு ஆற்காடு வீராசாமி போல, இன்னைக்கு ஒரு செந்தில் பாலாஜி..

 தமிழ்நாடு மாடல்

தமிழ்நாடு மாடல்

11 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது முதல், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு காரணமே அதிமுக அரசுதான்.. இன்று, திமுக கொண்டு வந்த திட்டம் போன்று அதை செயல்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? 7.5 சதவீத இட ஒதுக்கீடு பொறியியல் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தியதுதான் தமிழ்நாடு மாடல்.

 பொய் வழக்குகள்

பொய் வழக்குகள்

ஆனால், திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, அதிமுக கொண்டு வந்த திட்டத்தை இவர்களே கொண்டு வந்தது பல சித்தரித்து காட்டுவது எந்த விதத்தில் நியாயம்? பொய் வழக்குகள் பலபோடப்பட்டு வருகிறது-. என் மேலயும் நிறைய கேஸ்கள் உள்ளன.. அதையெல்லாம் சமாளிக்கும் தைரியம் எனக்கு இருக்கு.. அதக்காக அதிமுக தொண்டன் மீது திமுக பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்கு தொடர்ந்தால், அதை எல்லாம் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டோம்" என்றார்.

சிவபதி

சிவபதி

இதற்கு அடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் சிவபதி, "இப்போ அடிக்கடி கரண்ட் போய் கொண்டிருப்பது உங்களுக்கே நல்லா தெரியும்.. இது ஒன்றும் ஆச்சரியம் கிடையாது.. திமுக ஆட்சிக்கு வந்தாலே கரண்ட் போகும், மின்தட்டுப்பாடு ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.. 10 வருஷம் அவங்களுக்கு ஆட்சி இல்லை.. அதனால் காய்ந்து போய் கிடக்கிறார்கள்..

சபரீசன்

சபரீசன்

எம்பி தேர்தல் வரபோகிறது.. கவனமாக இருக்க வேண்டும்.. இப்பவே அதிமுகவை ஆட்சியில் உட்கார வைக்க மக்கள் ரெடியாகிவிட்டனர்.. காரணம், குடும்ப ஆதிக்கம் தலைதூக்கிவிட்டது. ஒரு காரியம் நடக்க வேண்டுமானால், ஸ்டாலினின் மருமகன் சபரீசன்கிட்ட தான் பேசணும் என்ற நிலைமை இன்றைக்கு உள்ளது. டாஸ்மாக் வருமானத்தை வைத்து ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. இப்படியே போனால், இலங்கை நிலைமைதான் இங்கேயும் வரும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+