ஒரே குடும்பத்தில் முதல்வர், துணை முதல்வர்.. இது தப்பே இல்லைங்க! சகஜம் தானே.. சொல்றது யார்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: தமிழ்நாடு துணை முதலமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் திமுக வாரிசு அரசியல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்றது தவறு இல்லை என கூறியிருக்கிறார் சிவகங்கை தொகுதி எம்பி ஆன கார்த்தி சிதம்பரம்.

திமுக இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

udayanidhi stalin dmk karti chidambaram

அவர் அமைச்சராக பதவியேற்பார் என கூறப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போது அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதே பேசுபொருளாக இருந்தது.

ஒரு வழியாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உதயநிதி நில மாதங்களுக்கு பிறகு நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

தொடர்ந்து பல மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக எப்போது பதவி ஏற்பார் என்ற விவாதங்கள் எழுந்தது. இது தொடர்பாக திமுக அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சரவை மாற்றமும் இருந்த நிலையில் நேற்று பதவியேற்பு நிகழ்ச்சியில், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும், அமைச்சர்களாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

udayanidhi stalin dmk karti chidambaram

இந்நிலையில் திமுக வாரிசு அரசியல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்புக்கு கண்டனமும், விமர்சனங்களையும் தொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் துணை முதல்வராக பதவியேற்றது தவறு இல்லை என கூறியிருக்கிறார் சிவகங்கை தொகுதி எம்பி ஆன கார்த்தி சிதம்பரம்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல அரசியலுக்கு வருவது ஒன்றும் தமிழகத்திலும் இந்தியாவிலும் புதிதல்லா. இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களில் பல கட்சிகளில் இதே போன்று பல சம்பவங்களை கூறலாம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகவும், மற்றொருவர் துணை முதலமைச்சர் ஆவதும் புதிது கிடையாது.

மத்திய மாநில அமைச்சரவைகளை யாரை வேண்டுமானாலும் நீக்கவும், மாற்றவும், சேர்க்கவும் பிரதமருக்கும் முதலமைச்சர்களுக்கும் முழு அதிகாரம் உண்டு. அந்த அடிப்படையில் தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. செந்தில் பாலாஜியை கைது செய்து 400-க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் அடைத்தது மிகவும் தவறானதாகும். ஒருவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படுவது வேறு.

ஆனால், விசாரணையை தொடங்காமல் ஒருவரை சிறையில் அடைத்து பல நாட்கள் வெளி உலகத்திற்கே காட்டாமல் இருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த நடைமுறை வரும் காலங்களில் நீக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. குற்றம் உறுதி செய்யப்படாத ஒருத்தரை வளர்த்து இருக்கிறது என்பதற்காக பதவி கொடுக்க முடியாது எனக் கூற முடியாது. தேர்தலில் போட்டியிட தகுதி பெற்ற அனைவருமே அமைச்சராகவும் தகுதி உடையவர்கள் தான்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+