10 தலை கொண்ட ராவணன் பாஜக.. ராமனை போல் மு.க.ஸ்டாலின் வீழ்த்திக் காட்டுவார்.. அமைச்சர் ரகுபதி!
ராமாயணத்தில் வரும் ராவணனை ராமன் வீழ்த்தியது போல் பாஜகவை மு.க.ஸ்டாலின் வீழ்த்துவார் என ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை: ராமாயணத்தில் பத்து தலை கொண்ட ராவணனை ஒரு தலை கொண்ட ராமன் வென்றது போல், பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை ஒருங்கிணைத்து மு.க.ஸ்டாலின் வீழ்த்தி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விட்டு போகும் போது வெறும் டெண்டராக வைத்து விட்டு போய் உள்ளார். கமிஷன், கரப்சன், கலெக்ஷனில் மன்னனாக இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக செல்வாக்கு குறைந்தது
எடப்பாடி பழனிசாமி டெண்டர் வைத்துவிட்டு சென்ற பணத்தையும் இப்போது திமுக தான் சரிசெய்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் வாக்கு சதவிகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. திமுக அரசை விட்டால் வேறு அரசு நல்ல ஆட்சி அமைக்க முடியாது என்று மக்களின் மனநிலை மாறிவிட்டது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, திமுக அரசின் நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியே சான்றாக மாறியுள்ளது.

பத்து தலை ராவணன்
ஆனால் மத்தியில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் மிக்க தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். ராமாயணத்தில் பத்து தலை உள்ள ராவணனை, ஒரே தலை கொண்ட ராமன் வென்றது போல், பத்து தலை ராவணனாக இருக்கக் கூடிய மத்திய அரசை மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையக் கூடிய கூட்டணி நிச்சயமாக வீழ்த்தும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆன்லைன் ரம்மி விவகாரம்
திமுக அரசு பல நன்மைகளை செய்து வருவதற்கெல்லாம் மத்திய அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது. அந்த முட்டுக்கட்டை தான் ஆளுநர். ஆட்டிற்கு உள்ள தாடி எதற்கும் பயன்படாது. அதுபோல மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு என்று அண்ணா கூறினார். அதுபோல அதனை இன்றைய பல ஆளுநர்கள் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆசையைக் காட்டி பணத்தை புடுங்குகிறார்கள். அதனால் பல தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி மக்களுடைய நன்மைக்காக அனுப்புகிறோம்.

மக்களை காப்பாற்றுவோம்
அதனை புரிந்து கொள்ளும் தன்மை ஆளுநருக்கு இல்லை. ஆளுநரின் இந்த செயலுக்கு யார் அதிகாரத்தை கொடுத்தது என்று ஆளுநரிடம் கேட்கிறேன். ஏற்கனவே புதிய சட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியதை ஆளுநர் கவனிக்க மறந்துவிட்டார். இப்படியான சூழ்நிலை இருந்தாலும் மீண்டும் அந்த சட்டம் இயற்றப்படும். அதனை ஆளுநருக்கு அனுப்பி சரியான ஒப்புதல் பெறப்படும். இந்த சட்டத்தின் மூலமாக இணைய வழி சூதாட்டத்தில் இருந்து தமிழ்நாடு மக்களை காப்பாற்றுவோம். இதற்கு இந்த தமிழ்நாடு அரசு முழுவீச்சில் செயல்படும் என்று தெரிவித்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications