விபரீத ராதா.. வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவன்.. குழந்தைகளை உயிரோடு கொளுத்தி.. அறந்தாங்கி ஷாக்

2 குழந்தைகளை கொன்ற தாய் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: 45 வயசான கணவர் முத்து, ஒரு காலேஜ் பெண்ணை இழுத்து கொண்டு ஓடிவிட்டார்.. இதனால் மனம் உடைந்த மனைவி ராதா, தூங்கி கொண்டிருந்த 2 குழந்தைகளை உயிருடன் கொளுத்திவிட்டு, தானும் தீ வைத்துகொண்டு இறந்துவிட்டார்.. இப்படி ஒரு துயரமான சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்துள்ளது வல்லம்பக்காடு என்ற ஊர்.. இங்கு வசித்து வருபவர் முத்து.. 45 வயசாகிறது.. மனைவி பெயர் ராதா.. 34 வயதாகிறது.. அபிஷேக் 13, அபிரித் 9, என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஒரு கல்லூரி மாணவியுடன் முத்துவுக்கு பழக்கம் ஏற்பட்டது.. அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.. அதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி ஜாலியாக இருந்துள்ளனர். இந்த விஷயம் ராதாவுக்கு தெரியவந்துள்ளது.. அதனால் கணவனை பலமுறை கண்டித்துள்ளார்.. கெஞ்சியுள்ளார்.. சண்டை போட்டுள்ளார்.

மாணவி

மாணவி

ஆனால், முத்து கேட்கவில்லை.. ஒருகட்டத்தில் ராதாவின் கெடுபிடி தாங்க முடியாமல், அந்த மாணவியுடன் ஊரை விட்டே ஓடிவிட்டார். இந்த விஷயம் கேள்விப்பட்டு மாணவியின் பெற்றோர் போலீசில் தந்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் அந்த ஜோடியை தேடி வருகிறார்கள்.. இந்நிலையில் கணவன், ஒரு பெண்ணுடன் ஓடிப்போய்விட்டதால் ராதாவுக்கு அவமானமாக போய்விட்டது.

குழந்தைகள்

குழந்தைகள்

மன உளைச்சலிலேயே தவித்து கொண்டும் அழுது கொண்டும் இருந்தார்.. பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்.. அம்மாவும், அப்பாவும் இல்லாமல் அந்த குழந்தைகளும் அனாதை ஆகிவிடக்கூடாது என்பதால், அந்த குழந்தைகளையும் கொலை செய்ய முடிவு செய்தார்.

 தூக்க மாத்திரை

தூக்க மாத்திரை

நைட் சாப்பாட்டில் தூக்க மாத்திரைகள் கலந்து பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டார்.. அவர்களும் அம்மா தந்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டனர்.. பின்னர், குழந்தைகள் அசந்து தூங்கியவுடன், அவர்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றினார்.. அதே மண்ணெண்ணெயை தன் மீதும் ஊற்றிக் கொண்டார்.. தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது தீயை வைத்துவிட்டு, தன் மீதும் நெருப்பை பற்ற வைத்து கொண்டார்.

 தற்கொலை

தற்கொலை

இதில் 3 பேருமே தீயில் சிக்கி அலறி துடித்தனர்.. அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர்.. ஆனால், ராதாவும் அப்ரீத்தும் அங்கேயே உடல் வெந்து இறந்துவிட்டனர்.. பிறகு அபிஷேக்கை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஆனாலும், அபிஷேக் உயிரிழந்தான்... இந்த சம்பவம் புதுக்கோட்டையில் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.. அந்த கள்ள ஜோடியை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+