பெரியாரின் சிந்தனைகள் உள்ளவரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.. ஸ்டாலின் அதிரடி!

பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ளவரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ளவரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே சுயமரியாதை முழு அரசு அங்கீகாரத்துடன் நடந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் சுயமரியாதை ஒரு இயக்கமாக நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சியில்தான் சுயமரியாதை திருமணத்திற்கு முதன் முதலாக அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பேசி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் கழக திமுக மூத்த நிர்வாகி காசி விஸ்வநாதன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.

பெரியார் முக்கியம்

பெரியார் முக்கியம்

இதில் அவர் பேசியதாவது, பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ளதால் தான் தமிழகத்தில் எந்த ஆதிக்க சக்தியாலும் நுழைய முடியவில்லை. திமுகவை அவர்களின் கருத்துக்கள்தான் வழி நடத்தி வருகிறது. திமுக பல சமூக சீர் திருத்தங்களை செய்து இருக்கிறது.

சுயமரியாதை அங்கீகாரம்

சுயமரியாதை அங்கீகாரம்

சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான்.1967 - ஆம் ஆண்டிற்கு முன்பு சீர் திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. கடந்த 1967 ஆம் ஆண்டில் முதல்வர் ,பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம்

திருமணம்

தெய்வீக திருமணத்தை நான் எதிர்க்கவில்லை. பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் இருக்கும் வரை தமிழகத்தில் திமுகவை எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது. தமிழகத்தில் மிக விரைவில் திமுக ஆட்சி அமையும்.

திமுக எப்படி

திமுக எப்படி

ஒரு சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது. திமுக எப்போதையும் விட மிக வலிமையாக இருக்கிறது. லோக்சபா தேர்தலில் நாங்கள் பெற்ற வெற்றியை சட்டசபை தேர்தலிலும் பெறுவோம், என்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+