தொப்புள் கொடி ஈரமே காயலை! குழிக்குள் குவா குவா சத்தம்! புதுக்கோட்டை வினோதினியா? சிக்கிய சிலம்பரசன்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நர்சிங் மாணவியுடன் இளைஞர் ஒருவர் நெருங்கி பழகியதில் திருமணத்திற்கு முன்பே அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனக்குத் தானே பிரசவம் பார்த்துள்ளார் அந்த மாணவி. வீட்டில் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே உயிரோடு குழந்தையை புதைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும் சில சமயங்களில் கர்ப்பம் அடைவதும் குழந்தை பெறும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட தஞ்சாவூர், மதுரையில் பள்ளி சிறுமிகள் கர்ப்பமானது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி தரும் விதமாக தஞ்சையில் பள்ளி கழிவறையில் மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த வகையில் புதுக்கோட்டையில் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் தனக்குத் தானே பிரசவம் பார்த்ததோடு வீட்டு வாசலில் பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்திருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே உதயசூரியபுரம் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் வினோதினி என்ற மாணவி புதுக்கோட்டையில் நர்சிங் படித்து வந்திருக்கிறார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
காதலித்து வந்த இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கின்றனர். இந்த நிலையில் வினோதினி கர்ப்பம் அடைந்திருக்கிறார். இது குறித்து காதலன் சிலம்பரசனிடம் கூறிய போது சிறிது நாள் சமாளிப்போம் பிறகு திருமணம் செய்து கொள்வோம் எனக் கூறியிருக்கிறார். நாட்கள் செல்ல செல்ல சிறுமியின் வயிறு பெரிதானது. வயிற்றில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் என வினோதினி சமாளித்து இருக்கிறார்.
தொடர்ந்து சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தனக்குத் தானே பிரசவம் பார்த்திருக்கிறார் தொடர்ந்து. தனது குழந்தை பிறந்த தகவலை காதலன் சிலம்பரசனிடம் கூறியிருக்கிறார். வீட்டுக்கு வந்த அவர் குழந்தையை யாருக்கும் தெரியாமல் புதைத்து விடுவோம் என சொல்லி உள்ளார். இதை அடுத்து வீட்டின் முன்பு குழி தோண்டி பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் உயிரோடு புதைத்து இருக்கின்றனர்.
அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து குழந்தையை மீட்டுள்ளனர். மேலும் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குழந்தையை கொல்ல முயன்ற சிலம்பரசன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக நரசிங் மாணவி வினோதினி மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!












Click it and Unblock the Notifications