ஏசி இயங்காததால் வாக்குவாதம்.. செங்கோட்டை - தாம்பரம் ரயிலை நடுவழியில் நிறுத்திய பயணிகள்.. பரபரப்பு
புதுக்கோட்டை: செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் ஏசி இயங்காததால், பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதால் புதுக்கோட்டை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
பயணிகளுக்கு பிடித்தமான பயணம் என்றால் அது ரயில் பயணமாக தான் இருக்கும். பஸ், விமான சேவைகளை விட ரயிலில் பயணிக்கவே பலரும் விரும்புவர். இதற்காக ரயில்வேயும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. எனினும் ஒருசில நேரங்களில் பயணிகளை சலிப்படைய செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், நேற்று எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் ஏசி இயங்காததால் பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 20684) இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்தனர்.
இந்த நிலையில், ரயிலின் பி5 என்ற ஏசி கோச்சில் ஏசி இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பெட்டியில் பயணித்த பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். இது தொடர்பாக ரயில்வே எண்ணுக்கு பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, அந்த ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரயில் புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி ரயில் நிலையத்தை கடந்த போது பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். மேலும் ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் ரயிலில் இருந்து கீழே இறங்கி ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளிடம் ஏசியை சரி செய்த பின்னரே ரயிலை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தற்காலிகமாக ஏசி சரி செய்யப்பட்டது. அதன்பின்னரே பயணிகள் ரயில் பெட்டியில் ஏறினர். இதையடுத்து அந்த ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சுமார் இரவு 11. 30 மணியளவில் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் அறந்தாங்கி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications