புர்காவோடு வலம் வந்த இரு பெண்கள்! கையில பார்த்தா ‘பார்வதி’! தீயாய் பரவும் வீடியோ! பரபர புதுக்கோட்டை!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் புர்கா அணிந்த இந்து பெண்களை, புர்காவை நடுரோட்டில் கழட்ட வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
புர்கா அணிந்த பெண்ணை நடுரோட்டில் புர்க்காவை அவிழ்க்க செய்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கவிதா மற்றும் பார்வதி ஆகிய இரு பெண்கள் இஸ்லாமியர்களின் உடையான புர்க்காவை அணிந்து சுற்றி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சந்தேகமடைந்த நபர் ஒருவர், புர்க்காவை அவிழ்க்க சொல்லி கேட்டுள்ளார்.

புர்கா
பெண்களை புர்காவை நடுரோட்டில் கழட்ட வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி இந்திரா நகர் பகுதியில் இரண்டு பெண்கள் புர்கா அணிந்து வலம்வந்துள்ளனர். அவர்கள் கையில் பச்சை குத்தியிருப்பதை அறிந்து அங்கிருந்த ஆண் ஒருவர் இது குறித்து அந்த பெண்களிடம் விசாரித்துள்ளார்.

சர்ச்சை
அப்போது அந்த பெண்கள் தங்களின் பெயர் கவிதா மற்றும் பார்வதி என்றும்,தாங்கள் வயிற்று பிழைப்பிற்காக அப்பகுதியில் புர்கா அணிந்ததாகவும் மேலும் அதில் ஒரு பெண்மணி கர்ப்பிணி என்றும் தயவுசெய்து எங்களை வீடியோ எடுத்தும் போலீசில் புகார் அளித்தும் அசிங்கப்படுத்த வேண்டாம் என்று கெஞ்சி கதறி உள்ளனர்.

தீயாய் பரவும் வீடியோ
அப்படியும் அந்த பெண்களை விடாமல் உடனடியாக புர்காவை அவிழ்க்குபடி அந்த ஆண் கேட்டுள்ளார். மறைவான இடத்திற்கு சென்று புர்காவை அந்த பெண்கள் அவிழ்த்த பொழுது அதனை வீடியோவாக பதிவேற்றம் செய்ததோடு அதனை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் வீடியோவை வாட்ஸ் அப் குழுக்களிலும் பரப்பி உள்ளார். மேலும் புர்கா என்பது இஸ்லாமியர்களின் உடை அதை எவ்வாறு நீங்கள் உடுத்தலாம் என்றும் அந்த ஆண் கேட்டுள்ளார்.

விசாரணை
புர்காவை கழட்டிய பிறகு அவர் அணிந்திருந்த துப்பட்டாவிற்கு பதிலாக அந்த புர்காவை பயன்படுத்திய பொழுதும் அதனை பயன்படுத்த கூடாது என்று அந்த ஆண் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications