1.5 பவுன் நகைக்காக சித்தி மகளை கொன்ற இளைஞர்.. தூக்கு தண்டனை விதித்த புதுக்கோட்டை நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: கடந்த 2021ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.25 பவுன் நகைக்காக இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் அப்போது இந்தச் சம்பவம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் குற்றவாளி சுரேஷுக்கு தூக்குத் தண்டனை விதித்து புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்தே வருகிறது. அப்படித் தான் கடந்த 2021ல் புதுக்கோட்டையில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கிப் போடுவதாக அமைந்தது.

Pudukkottai lady murder for gold Court issues death penalty to Culprit

அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்.. 32 வயதான சுரேஷ் தங்க நகைக்காகத் தனது சொந்தச் சித்தி மகளான லோக பிரியா என்ற இளம்பெண்ணைப் படுகொலை செய்தார். 1.25 நகைக்கு லோக பிரியாவை கத்தியால் குத்தியும், இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்தார். இந்தச் சம்பவம் அப்போது தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய புதுக்கோட்டை போலீசார் லட்சுமணன் என்ற சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீதான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. லோக பிரியா கொலையில் சுரேஷ் குற்றவாளியை என்பதை நிரூபிக்கத் தேவையான அனைத்து ஆவணங்களையும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பித்தனர்.

இது தொடர்பான விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், நேற்று புதன்கிழமை முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. லோக பிரியாவை லட்சுமணன் என்ற சுரேஷ் கொலை செய்துள்ளது உறுதியானதால் அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்குவதாக வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரன் தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+