காதலியை சந்திக்க இரவில் வீட்டுக்கு வந்த காதலன்.. பார்த்துவிட்ட அண்ணன்.. நடந்த பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: காதலை கைவிட மறுத்த தங்கையின் காதலனை அடித்துக் கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்டுத்தி உள்ளது.

தங்கையுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த ஆத்திரத்தில் சரமாரியாக கட்டையில் அடித்ததுடன், அவரது தாய்க்கு போனில் அழைத்து அவரிடம் அனுப்பி வைத்துள்ளார் பிரபு. ஆனால் உடல்நிலை மோசமாகி தங்கையின் காதலன் உயிரிழந்துள்ளார்,.

புதுக்கோட்டை பாலன்நகர் சேதுராமம் வீதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி காமாட்சி. இவர்களது மகன் நல்லய்யா(23). 12ம் வகுப்பு வரை படித்துளள இவர், கோவையில் உள்ள பேக்கரில் வேலை செய்து வந்தார்.

காதலி வீட்டில்

காதலி வீட்டில்

இவர் அதே ஊரைச் சேர்ந்த 20 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த அந்த பெண்ணின் சகோதரர் பிரபு(28) கண்டித்துள்ளார் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த நல்லய்யா, நேற்று முன்தினம் இரவு காதலி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார். இதை பார்த்த பிரபு, அருகில் கிடந்த கடையால் நல்லய்யாவை தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்தார்.

தாயுடன் அனுப்பி வைப்பு

தாயுடன் அனுப்பி வைப்பு

உடனே பிரபு நல்லய்யாவின் தாய் காமாட்சிக்கு போன் செய்து வரச்சொலி அவருடன் அனுப்பி வைத்தார், இதில் வீட்டுக்கு வந்த பிறகு மகனின் காயத்துக்கு காமாட்சி முதலுதவி அளித்துள்ளார். அப்போது உடல்நிலை மோசம் அடைந்ததால் நல்லய்யா மயங்கி விழுந்தார்.

மரணம்

மரணம்

இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி பதறி துடித்தார். உடனே அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர் பரிசோதித்த போது, நல்லய்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

விசாரணை

விசாரணை

இதையடுத்து நல்லய்யாவின் தாய் காமாட்சி அளித்த புகாரை ஏற்று திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்கையின் காதலனை அண்ணன் அடித்துக்கொன்ற சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+