குடிச்சு குடிச்சு "வேலை செய்யலை".. பொண்ணு தர மாட்டேங்கறாங்க.. பாட்டிலுடன் கண்ணீர் சிந்திய தாத்தா!

புதுக்கோட்டையில் 142 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சாராயத்தை குடிச்சு குடிச்சு எனக்கு நரம்பே வேலை செய்யல.. பொம்பளை பிள்ளைங்க என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறாங்க.. பொண்ணு யாரும் குடுக்க மாட்டேங்குகிறாங்க.. பொம்பளைங்க இல்லாததால இப்படி தண்ணி அடிக்கிறேன்" என்று ஒரு தாத்தா சொல்லி உள்ளார்.

Recommended Video

    குடிச்சு குடிச்சு 'வேலை செய்யலை'.. பொண்ணு தர மாட்டேங்கறாங்க.. பாட்டிலுடன் கண்ணீர் சிந்திய தாத்தா!

    50 நாள் நிம்மதியாக இருந்தது தமிழகம்.. போன வாரம் 2 நாள் டாஸ்மாக்கை திறந்து வைத்ததும் தமிழகம் முழுவதும் ரத்த வாடை தெறித்து வந்தது.. அந்த அளவுக்கு வன்முறை சம்பவங்கள் நடந்தன.

    Pudukottai grand old man shares his humorous story

    இன்று திரும்பவும் கோர்ட் வரைசென்று அனுமதி வாங்கி மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.. கலர் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. மாஸ்க் இருந்தால்தான் சரக்கு என்று சொல்லிவிடவும் வேறு வழியில்லாமல் மாஸ்க்குடன் டாஸ்மாக் முன்பு குவிந்துவிட்டனர்.

    அந்த வகையில், புதுக்கோட்டையிலும் விற்பனை ஜரூராக நடந்தது.. அந்த வகையில் சில விசித்திரங்களும் இங்கு அரங்கேறின.. எல்லாரும் மறக்காமல் குடையை எடுத்து வந்திருந்தனர்.. ஒருசிலர் டோக்கன் முடிந்துவிடும் என்று நினைத்து கொண்டு, வழங்கப்பட்ட டோக்கனை கடையில் தராமல் கையோடு எடுத்து சென்றனர்.. அதேபோல, பெரியவர் ஒருவர் பாட்டில் வாங்க வந்திருந்த அனைவரையும் தன் கண்ணீர் கதையை சுருக்கமாக சொல்லி தெறிக்க ஓடவிட்டார்.

    மாஸ்க், குடை, டோக்கன் என அத்தனை அம்சங்களையும் அந்த தாத்தா கையில் வைத்திருந்தார்.. அவர் பேசும்போது, "சாராயத்தை குடிச்சு குடிச்சு எனக்கு நரம்பே வேலை செய்யல.. பொம்பளை பிள்ளைங்க என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறாங்க.. பொண்ணு யாரும் குடுக்க மாட்டேங்குகிறாங்க.. பொம்பளைங்க இல்லாததால இப்படி தண்ணி அடிக்கிறேன்" என்றார்.

    நம்ம ஊரில் இந்த பாழாய்போன குடியால், குடும்பங்கள் கெட்ட கதையைதான் கேட்டிருக்கோம்.. பார்த்திருக்கிறோம்.. ஆனால் தாத்தாவுக்கு இன்னும் பொண்ணே கிடைக்கலையாம்.. அந்த அதனால்தான் தண்ணி அடிப்பதாக காரணம் சொல்கிறார்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+