வசமாக சிக்கிய "வசந்தி".. சிறுமி நரபலிக்கு ஐடியா தந்த சாமியார்.. சுற்றி வளைத்த கந்தர்வகோட்டை போலீஸ்

13 வயது சிறுமி நரபலி தந்த விவகாரத்தில் பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: மகளை நரபலி தந்தால் யோகம் பெருகும், ஆண் குழந்தை பிறக்கும் என்று 53 வயது பன்னீருக்கு ஆசை வார்த்தை கூறிய மந்திரவாதி வசந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகி இருந்த அவருடன் சேர்த்து பெண் உதவியாளர் உட்பட மேலும் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Recommended Video

    13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை

    கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம்.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி.. 55 வயதாகிறது.. இவருக்கு 2 மனைவிகள்.. முதல் மனைவி இந்திரா, அவருக்கு வித்யா உட்பட 4 குழந்தைகள் உள்ளனர்.. 2வது மனைவி மூக்காயி.. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

     pudukottai murder case: woman arrested for witchcraft

    தச்சங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த வித்யா, 15 தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இறந்துவிட்டார்.. உடம்பெல்லாம் காயங்கள் இருக்கவும் நிச்சயம் பலாத்காரம்தான் செய்யப்பட்டிருப்பார் என்று யூகிக்கப்பட்டு, அது சம்பந்தமான விசாரணையும் நடந்து வந்தது.. அப்போதுதான் திடீர் திருப்பமாக பெற்ற தந்தையே மகளை நரபலி தந்தது தெரியவந்தது. இதற்கு காரணம் பெண் மந்திரவாதி வசந்திதான்!!

    முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளில் யாரையாவது ஒருவரை நரபலி தந்தால் செல்வம் கொட்டும் என்று சொல்லி இருக்கிறார்.. அதனால்தான் கடந்த 17-ம் தேதி இரவு, அதாவது மகளை கொல்வதற்கு முந்தைய நாள் தைல மரக்காட்டுக்குள் விடிய விடிய பூஜை நடத்திவிட்டு வந்துள்ளார்.

    பொழுதுவிடிந்ததும் காலை 7 மணி அளவில், வித்யாவை கூப்பிட்டு குளத்தில் போய் தண்ணீர் எடுத்து கொண்டு வர சொல்லி உள்ளார்.. மகள் குடத்தை எடுத்துக் கொண்டு குளத்துக்கு போனதும், பின்னாடியே அப்பா பன்னீர்செல்வமும் சென்றிருக்கிறார். உன்னுடன் பேச வேண்டும் என்று சொல்லியே தைல மரக்காட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

    குடத்தை தலையில் வைத்து தூக்கி செல்வதற்காக கொண்டு வந்திருந்த டவலை பிடுங்கி மகளின் கழுத்தை இறுக்கி உள்ளார். இதை இவரது 2வது மனைவி மூக்காயி, மந்திரவாதி வசந்தி உட்பட சிலர் வேடிக்கை பார்த்து கொண்டே நின்றிருக்கிறார்கள். பாலியல் பலாத்காரம் போல இதை சித்தரிக்க வேண்டும் என்பதற்காக மகளின் துணிகளை பெற்ற தந்தையே களைந்துள்ளார்.. மகளின் உள்ளாடையையும் கழற்றி எல்லாரும் பார்க்கும்படி அங்கேயே எறிந்துள்ளார்.

    இந்நிலையில், பன்னீர் உட்பட 5 பேரை ஏற்கனவே கைது செய்த போலீஸ் தற்போது, பெண் மந்திரவாதியான வசந்தியையும் கைது செய்துள்ளனர்.. ஆஸ்பத்திரியில் சிறுமி இறந்தபோதே வசந்தி தலைமறைவாகி விட்டார். உடனே தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பிறகே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.. இவருக்கு முருகாயி என்ற பெண் அசிஸ்டெண்ட் இருந்திருக்கிறார்.. அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    இவர்கள் இதற்கு முன்பு இப்படி எத்தனை பேரை நரபலி கொடுத்துள்ளனர்.. எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட ஐடியாக்களை தந்து ஏமாற்றி பணம் பறித்துள்ளனர் என்பன போன்ற விசாரணைகளில் போலீசார் இறங்கி உள்ளனர்.. தொடர் விசாரணை வசந்தியிடம் நடந்து வருகிறது.. மகளை கொன்ற பன்னீர்செல்வம், ஏற்கனவே பொன்னமராவதி பகுதியில், பழமையான ராமர் சிலையை கடத்தியது தொடர்பாக, கைதாகி ஜெயிலுக்கு போனவராம்.

    அதனால் நிறைய குற்ற செயல்களில் அவரும் ஈடுபட்டிருப்பார் என்பதால் கிடுக்கிப்பிடி விசாரணை அவரிடம் நடக்கிறது.. இதனிடையே 10 நாளைக்கு முன்பு பன்னீர்செல்வத்தின் 2-வது மனைவி மூக்காயி இறந்துவிட்டார்.. அவரது மர்ம மரணத்தையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+