புதுக்கோட்டை சரண்யா.. கணவனின் எலும்பை முறித்து.. இப்படியும் ஒரு பெண்ணா? அதிர்ந்த போலீஸ்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கறம்பக்குடி தவெக நிர்வாகி குறித்த செய்திக கடந்த 2 நாட்களாகவே பரபரப்பை தந்து வருகிறது.. குடும்பத்தில் ஏற்பட்ட சாதாரண தகராறு, ஒரு உயிரையே காவு வாங்கிவிட்டது.. வீட்டில் நடந்த சம்பவத்தைப் பார்த்த மனைவி, கணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் புகார் அளித்தார்.. ஆனால் உடலை பரிசோதித்தபோது கிடைத்த ரிப்போர்ட்கள்தான், புதுக்கோட்டை போலீஸையே அதிர வைத்துள்ளது. அதன் விவரத்தை இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
கறம்பக்குடி அருகே உள்ள கீழவாண்டான்விடுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ். தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகி ஆவார்.. இவர் சரண்யா என்ற பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தார்..

இதையடுத்து இவருக்கும் சரண்யாவுக்கும் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு 2 வீட்டினரின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
புதுக்கோட்டை சரண்யா
கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி இரவு கணவன், மனைவி இடையே குடும்பப் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு இரவு சுமார் 10.50 மணியளவில் சூரியபிரகாஷ் வீட்டின் உத்திர மரக்கட்டையில் புடவையால் தூக்கில் தொங்கி விட்டார். இதை பார்த்து அலறிய சரண்யா, உடனடியாக மழையூர் போலீசுக்கு புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் மறுநாள் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
ஆனால், சூரியபிரகாஷின் உறவினர்களுக்கு அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என்று நேரடியாகவே போலீஸிடம் சொன்னார்கள்.. அத்துடன் செப்டம்பர் 30-ம் தேதி புதுப்பட்டியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இதனால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்ததுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாரும் அவர்களிடம் தெரிவித்திருந்தனர்.. அதன்படியே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதில், சூரியபிரகாஷின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், சில காயங்களுடன் எலும்பு முறிவும் இருந்ததாகவும் தகவல் வெளியானது. தடய அறிவியல் ஆய்வு முடிவுகளும் கிடைத்த நிலையில், அவர் கண்டிப்பாக தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்தது.
அதிர்ச்சி வாக்குமூலம்
இதற்கு பிறகுதான் போலீசாரின் விசாரணை வளைத்துக்குள் உடனடியாக கொண்டு வரப்பட்டார் சரண்யா.. தீவிரமாக அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.. விஏஓ முன்னிலையிலேயே அவரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது. அப்போதுதான், கணவரை கொலை செய்துவிட்டு, தூக்கில் ஏற்றியதாகவும் சரண்யா சொன்னார்..
போலீசாரிடம் சரண்யா தந்த வாக்குமூலத்தில், திருப்பூரில் வேலை பார்த்தபோது ஒருவருடன் நெருங்கி பழகினேன்.. திருமணத்துக்குப் பிறகும் அவருடன் செல்போனில் தொடர்பில் இருந்து வந்தேன்.. இது என்னுடைய கணவருக்கு தெரிந்துவிட்டது.. என்னை கண்டித்ததால், எனக்கு அது பிடிக்கவில்லை.. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.. அதற்கு பிறகுதான் கொலை செய்ய முடிவு செய்தேன்.

விரைவில் விசாரணை
சரண்யாவின் இந்த வாக்குமூலத்தையடுத்து, சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. சூரியபிரகாஷின் மனைவி சரண்யாவை மழையூர் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திருச்சி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.. விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவுசெய்துள்ளனர்..
ஆனால், தாலி கட்டிய கணவனை இவ்வளவு கொடூரமாக, அதுவும் எலும்பு முறிவு ஏற்படுத்தி, ஒரு பெண் கொலை செய்ய முடியுமா?? என்று புதுக்கோட்டையே அதிர்ந்துகிடக்கிறது.


Click it and Unblock the Notifications
