58 வயசு.. பெருமாள் பார்த்த பலான வேலை! ஹெட் மாஸ்டர் இப்போ கம்பி எண்ணுறாரே! மாணவிகளுக்கு சபாஷ்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு பள்ளி ஒன்றில் ஏழு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 58 வயதான உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளை பார்த்து தைரியமாக சைல்ட் ஹெல்ப் லைனில் மாணவிகள் புகார் அளித்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களை கவலை கொள்ள செய்துள்ளது. குறிப்பாக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதால் பெற்றோர்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Pudukottai crime police

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கிருஷ்ணகிரியில் எட்டாம் வகுப்பு மாணவி பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பள்ளி கல்வித் துறைக்கு இந்த சம்பவங்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், பாலியல் வழக்குகளில் சிக்கும் ஆசிரியர்கள் மீது சட்டரீதியாக மட்டும் அல்லாது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உதவி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

புதுக்கோட்டை அரிமங்கலம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்கு பெருமாள் என்பவர் உதவி தலைமை ஆசிரியராக உள்ளார். தலைமை ஆசிரியர் காலிப் பணியிடமாக இருக்கும் நிலையில் அதனையும் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் பல மாணவிகளுக்கு பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் சம்பவங்களும் அவர்களே தைரியமாக புகார் அளித்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை மாணவியர் செய்திகள் மூலம் தெரிந்து கொண்டிருக்கின்றனர். இதை அடுத்து தங்களுக்கு உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் பாலியல் தொல்லை தந்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழும அதிகாரிகள் பொன்னமராவதி டிஎஸ்பி இடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சமூக நலத்துறை அதிகாரிகளும் இந்த விசாரணையில் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவியிடமும் தனித்தனியாக விசாரித்த போது ஏழு மாணவிகள் உதவி தலைமை ஆசிரியர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தனர்.

தொடர்ந்து மாணவிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பெற்ற நிலையில் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறுப்பு தலைமை ஆசிரியர் பெருமாளை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை சிஇஓ சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+