மாணவிகளுடன் ரகசிய சுற்றுலா.. பாடத்தைச் சொல்லிதர வேண்டிய ஆசிரியர்.. கொடைக்கானலில் ரூம் போட்ட சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளை மிரட்டி கொடைக்கானலுக்கு ரகசிய சுற்றுலா சென்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளை மிரட்டி கொடைக்கானலுக்கு ரகசிய சுற்றுலா சென்றதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் ரமேஷ் வயது 48 என்பவர், உதவி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர். இவர் 10 வருடங்களாக அங்கு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

ஆசிரியர் ரமேஷ் கடந்த வாரம், கல்விச் சுற்றுலா கூட்டிச் செல்வதாகக் கூறி, பள்ளி நிர்வாகத்துக்குத் தெரியாமல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள், இரண்டு மாணவர்கள் என ஐந்து பேரை கொடைக்கானலுக்கு தன்னுடைய காரில் ரகசியமாகச் சுற்றுலா அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு மாணவ மாணவிகளுடன் ஒருநாள் இரவு தங்கியதாகவும் சொல்லப்படுகிறது-

சுற்றுலா

சுற்றுலா

இவர்கள் சுற்றுலா சென்றது ஆரம்பத்தில் வெளியே தெரியவில்லை. ஆனால் சுற்றுலா சென்ற மாணவர் ஒருவர் மற்றொரு மாணவர்களிடம் பேசும் போது சொன்ன பிறகு வெளியே கசிந்திருக்கிறது. மெல்ல மெல்ல பள்ளி முழுவதும் பரவிவிடவே, அது பெற்றோர்களும் தெரியவந்துள்ளது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆசிரியர் ரமேஷ் மீது புகார் அளித்திருக்கிறார்கள்.

விசாரணையில் தகவல்

விசாரணையில் தகவல்

ஆசிரியர் ரமேஷின் மீதான இந்த புகாரை விசாரித்த கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறை, சமூகப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் நேரில் வந்து ஆசிரியர்கள் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் ஆகியோரை ஒவ்வொருவராக அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆசிரியர் ரமேஷ் பள்ளி நிர்வாகத்துக்குத் தெரியாமல் மாணவிகளை அழைத்துச் சென்றது, அவர்களுக்குப் பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுத்ததாக தெரியவந்துள்ளது.

வழக்கு

வழக்கு

மேலும், சுற்றுலா கூட்டிச் சென்ற விவகாரத்தை வெளியில் சொன்னால், செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்துவிடுவதாகவும் மாணவர்களை ஆசிரியர் ரமேஷ் மிரட்டியதாகவும் அதிகாரிகளிடம் புகாராக சொல்லியிருக்கிறார்களாம். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா புகார் அளித்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

புகாரை ஏற்று உதவி ஆசிரியர் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாடத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியரே கொடைக்கானலில் ரூம் போட்டு மாணவிகளுடன் ரகசிய சுற்றுலா சென்றதாக கூறப்படும் சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோர்கள் இந்த விவகாரத்தால் கொந்தளித்து போய் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+