Jallikattu: தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி.. தச்சங்குறிச்சியில் தொடங்கியது
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் இன்று (டிசம்பர் 3 ஆம் தேதி) தொடங்கியது.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடிவாசலைக் கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை. இங்கு தான் அதிகப்படியான, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம்.

ஜனவரி 3 ஆம் தேதி தச்சங்குறிச்சியில் புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி கிராம ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கியிருந்தனர். ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளதா என்பது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஜனவரி 3 ஆம் தேதியான இன்று தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நடத்த தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 900 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications