திடீர் ட்விஸ்ட்.. திருமாவளவன் - ஜான் பாண்டியன் திடீர் சந்திப்பு.. புதுக்கோட்டையில் நடந்தது என்ன?
புதுக்கோட்டை: தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவருமான ஜான் பாண்டியனும் திடீரென்று சந்தித்து கொண்டு பேசி உள்ளனர். இருவரும் புதுக்கோட்டையில் சந்தித்தது எப்படி? சந்திப்பில் என்னநடந்தது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசியலில் முக்கிய தலைவர்களில் ஒருவர் தொல் திருமாவளவன். அதேபோல் தான் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டவர்கள் முதன்மையானவர்கள். இவர்கள் 3 பேரும் தனித்தனியாக கட்சிகள் நடத்தி வருகின்றனர்.

அதேபோல் 3 பேரும் தமிழக அரசியலில் ஒன்றாக பயணிக்கவில்லை. அவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் பயணித்து வருகின்றனர்.
அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கிறார். அவர் சிதம்பரம் தொகுதியின் எம்பியாக இருக்கிறார். அதேபோல் கிருஷ்ணசாமி நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தென்காசியில் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி தோல்வியடைந்தார்.
அதேபோல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவராக உள்ள ஜான்பாண்டியன் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பயணிக்கிறார். இவரும் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆதிதிராவிட மக்களுக்காக குரல் கொடுத்து வரும் 3 பேரும் இப்படியாக தனித்தனியாக அரசியலில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று திடீரென்று திருமாவளவன் மற்றும் ஜான் பாண்டியன் ஆகியோர் திடீரென்று சந்தித்து இருப்பது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இன்று புதுக்கோட்டையில் திருமண விழா ஒன்று நடந்தது. இந்த விழாவில் திருமாவளவனும், ஜான் பாண்டியனும் பங்கேற்றனர். இருவரும் ஒரே நேரத்தில் திருமண விழாவுக்கு சென்றனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் மரியாதை நிமித்தமாக பேசி கொண்டனர். பரஸ்பரமாக இருவரும் நலம் விசாரித்து கொண்டு அருகருகே அமர்ந்து சகஜமாக பேசி கொண்டனர். இந்த சந்திப்பில் அவர்கள் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இதற்கிடையே தான் திருமாவளவன் - ஜான் பாண்டியன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications