Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ்
புதுக்கோட்டை: திருப்பரங்குன்றம் பைல்ஸ் என்ற ஆவணப்படம் திரையிடலுக்குக் கடைசி நேரத்தில் போலீசார் தடை விதித்ததாக 'வீதி' கலை இலக்கியக் களம் அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். எந்தவொரு உரிய எழுத்துப்பூர்வ விளக்கமும் இல்லாமல் திடீரென இந்த ஆவணப்படத்தைத் திரையிடத் தடை விதித்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
புதுக்கோட்டையில் கலை, இலக்கியம் மற்றும் சினிமா விவாதங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் 'வீதி' கலை இலக்கியக் களம் அமைப்பின் 144வது மாதாந்திரச் சந்திப்புக் கூட்டத்தில் நடந்த சில விஷயங்கள் இப்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. அங்குத் திரையிடப்பட இருந்த திருப்பரங்குன்றம் என்ற ஆவணப்படம் தடுத்து நிறுத்தப்பட்டதே இந்தச் சர்ச்சைக்குக் காரணம்.

திருப்பரங்குன்றம்- ஆவணப்படம்
இயக்குநர்கள் தவம் மற்றும் தமிழ்தாசன் கூட்டு இயக்கத்தில் உருவாகி இருந்தது இந்த ஆவணப்படம், திருப்பரங்குன்றத்தில் மக்கள் மத வேறுபாடுகள் இல்லாமல் இருப்பதைக் காட்டுகிறது. மேலும், உள்ளூர் மக்களின் நேர்காணல்களையும் கொண்டிருக்கிறது. இந்த ஆவணப்படம் ஏற்கனவே யூடியூப் தளத்தில் வெளியாகி, பலர் பார்த்துவிட்ட போதிலும், இதைத் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்ச்சிக்குத் தனியார் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த ஆவணப்படத்தைத் திரையிடக் கூடாது அரங்கு உரிமையாளருக்குக் கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என அழுத்தம் கொடுக்கப்பட்டதால், பயந்துபோன உரிமையாளர் நிகழ்ச்சிக்கு அனுமதி தரவில்லை.
போலீசார்
இதையடுத்து மாற்று ஏற்பாடாகப் புதுக்கோட்டை அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், நிகழ்ச்சி இடம் மாற்றப்பட்ட விவரமறிந்து புதிய இடத்திற்கும் போலீசார் சென்றுள்ளனர். இந்த ஆவணப் படத்தைத் திரையிடக்கூடாது எனச் சொல்லியுள்ளனர். இது தொடர்பாக விளக்கம் கேட்ட போதிலும், உரிய விளக்கம் கொடுக்க மறுத்துவிட்டனர்.
எது கேட்டாலும், "இது மேலிடத்து உத்தரவு... எந்தச் சூழ்நிலையிலும் இந்த ஆவணப்படத்தை இங்கே திரையிட அனுமதிக்க முடியாது" என்பது மட்டுமே பதிலாக வந்துள்ளது. எழுத்துப்பூர்வ விளக்கத்தைக் கொடுக்க போலீசார் மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
விளக்கம் இல்லை
இந்தத் திடீர் தடையால் அதிர்ச்சியடைந்த 'வீதி' அமைப்பினர், "ஏற்கனவே யூடியூப் தளத்தில் இந்த ஆவணப் படம் வெளியாகிப் பல ஆயிரம் வியூஸ்களை பெற்றிருக்கிறது. அப்படியிருக்கும்போது, மத நல்லிணக்கத்தைப் பேசும் ஒரு ஆவணப் படத்திற்குப் பொதுவெளியில் திரையிட ஏன் இவ்வளவு கெடுபிடி ஏன்?" கேட்டுள்ளனர். ஆனாலும், போலீசார் தரப்பில் இருந்து எந்தவொரு உரிய எழுத்துப்பூர்வ விளக்கமும் தரப்படவில்லை. இதையடுத்து ஆவணப்படம் திரையிடுவது தள்ளிவைக்கப்பட்டது..
அதேநேரம் இந்த நிகழ்ச்சி முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. மாறாக 'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்தில் பேசப்பட்ட அரசியல், அதன் பின்னணி மற்றும் கருத்துரிமை குறித்து நடந்த கண்டனக் கூட்டமாக மாறி நிறைவடைந்தது.
திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்
இந்த "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" (Thiruparankundram Files) ஆவணப்படம், மதுரை திருப்பரங்குன்றம் மலையில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்தையும், அதன் சமகால அரசியல் நிழல்களையும் மிகத் தெளிவாகப் பேசுகிறது. கார்த்திகை தீபம் ஏற்றுவது மற்றும் தர்கா எல்லை தொடர்பான சமீபத்திய நீதிமன்ற வழக்குகளை மையமாக வைத்துத் தொடங்கும் இந்த படம், உள்ளூர் மக்களின் நேர்காணல்களையும் கொண்டிருக்கிறது. தாங்கள் எந்தவித மதப் பாகுபாடும் இன்றி அண்ணன்-தம்பிகளாக, மாமன்-மச்சான்களாக வாழ்ந்து வருவதாக அதில் கூறியுள்ளனர்.
தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு இந்துக்கள் மாடு பூட்டி வண்டி ஓட்டுவதும், கோவில் திருவிழாக்களுக்கு முஸ்லிம்கள் நீர் மோர் வழங்குவதுமாக அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
சங்க காலத்தில் சமணர்கள் வாழ்ந்த, பிற்காலத்தில் நாயக்க மன்னர்கள் மற்றும் சுல்தான்களின் வரலாற்றுச் சான்றுகள் கொண்ட இந்த பொதுவான தொன்மை வாய்ந்த மலையை, அரசியல் அமைப்புகள் தங்களின் சுயலாபத்திற்காக ஒரு பதற்றமான களமாக மாற்ற முயல்வதையும், பாரம்பரியமாக அங்கு நடந்து வந்த ஆடு, கோழி பலியிடும் பூர்வகுடி தமிழர்களின் வழிபாட்டு உரிமைகள் தடுக்கப்படுவதாகவும் இந்த ஆவணப்படம் கூறுகிறது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications