'வாயில் வடை'.. ஒரு லட்சம் செங்கலில் 11 காலேஜ்? அண்ணாமலைக்கு திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா பதிலடி

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: உதயநிதி செங்கலை வைத்து எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி குறித்து பேசியதற்கு பதிலடி கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 11 மருத்துவ கல்லூரி கட்ட ஒரு லட்சம் செங்கல் கொடுத்திருக்கிறோம் என்றார். இந்த வீடியோ கிளிப்பை மட்டும் வெட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள புதுக்கோட்டை திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா, 1 லட்சம் கல்லு குடுத்து 11 காலேஜ் கட்டுனோம்னு சொல்றாரு.1 மெடிக்கல் காலேஜ் கட்ட குறைந்தது 1 லட்சம் சதுர அடி கட்டிடங்கள் தேவை என்று பதிலடி கொடுத்துளளார்.

தமிழக அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 2016 தேர்தலின் போது செங்கலை காட்டி பிரச்சாரம் செய்தார். அதேபோல் ஈரோட்டிலும் செங்கலை காட்டி பிரச்சாரம் செய்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டவில்லை என்று செங்கலை வைத்து உதயநிதி பிரச்சாரம் செய்தார்.

தொடர்ந்து செங்கலை வைத்து பிரச்சாரம் செய்து வரும் உதயநிதிக்கு செங்கலை வைத்து பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஈரோட்டில் பேசினார். தருமபுரியில் 14 ஆண்டுகள் ஆகியும் திமுக அறிவித்த தொழிற்பேட்டை அமையவில்லை என்று கேள்வி கேட்கும் போது செங்கலை காட்டினார் அண்ணாமலை.

செங்கல் வைத்து பிரச்சாரம்

செங்கல் வைத்து பிரச்சாரம்

அப்போது அண்ணாமலை பேசும் போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்பட்டு, 2026- ல் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம். மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டு, 150 மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் இணைத்து படித்துக் வருகிறார்கள் ஆனால் அமைச்சர் உதயநிதி செங்கல்லை காட்டி பிரச்சாரம் செய்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்தார்.

உதயநிதிக்கு புரியணும்

உதயநிதிக்கு புரியணும்

மேலும் செங்கல் ஒன்றை தூக்கி காட்டிய அண்ணாமலை, மத்தியில் பாஜக, தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் போது, இது போன்ற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கல்களைக் கொண்டு 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டது. அதில், 1,800 ஏழைக்குழந்தைகள் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கின்றனர். இதை உதயநிதி புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அண்ணாமலை காட்டம்

அண்ணாமலை காட்டம்

மேலும் அண்ணாமலை, தருமபுரியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று 2009 தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் 14 ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கல்கூட திமுக வைக்கவில்லை. எனவே தேர்தல் முடிந்தவுடன் இந்த செங்கலை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். 2026 எய்ம்ஸ் மருத்துவமனை பணி முடிந்தவுடன் அவரிடம் உள்ள செங்கலை திருப்பி தரட்டும். தர்மபுரி தொழிற்பேட்டை அமைத்துவிட்டு இந்த செங்கலை தரட்டும் என்றார். மேலும் உதயநிதி ஸ்டாலின் செங்கலை வைத்து முட்டாள்தனமாக அரசியல் செய்ய வேண்டாம் என்றும், அவருடைய அப்பா தமிழக மக்களுக்கு என்ன செய்தார் என்பதை கூறி வாக்கு கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.

திமுக எம்பி பதிலடி

திமுக எம்பி பதிலடி

இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், " லட்சம் கல்லு குடுத்து 11 காலேஜ் கட்டுனோம்னு சொல்றாரு (அண்ணாமலை). 1 மெடிக்கல் காலேஜ் கட்ட குறைந்தது 1 லட்சம் சதுர அடி கட்டிடங்கள் தேவை.அதுக்கே பல லட்சம் செங்கல் தேவைப்படும்.வெறும் ஒரு லட்சம் செங்கலில் 11 காலேஜ் கட்ட 56 இஞ்ச் பிரதமரா இருக்கணும்.இல்லாட்டி வாயில் வடை சுடணும்.ரெண்டும் ஒண்ணுதான்" என்று கூறியிருந்தார்.

ஸ்பெல்லிங் மிஸ்டேக்

ஸ்பெல்லிங் மிஸ்டேக்

இதனிடையே புதுக்கோட்டை எம்பி அப்துல்லா தனது இன்னொரு ட்வீட்டில், நான் சிவில் இஞ்சீனியர் அல்ல. அனுபவத்தின் அடிப்படையில் குத்து மதிப்பாகச் சொல்லியிருக்கேன். யாரேனும் சிவில் இஞ்சீனியர் 11 காலேஜ் கட்ட சரியான செங்கல் கற்கள் அளவைச் சொல்லவும் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ட்விட்டர்வாசி ஒருவர், ஒரு லட்சம் செங்கற்கள் (9*3*4.5") வச்சு சுமார் 11 ஆயிரம் சதுர அடி சுவர் (9" கனம்) கட்டலாம். அதாவது, சுமார் 3 ஆயிரம் சதுர அடி பில்டிங். தமிழ்நாட்டில் நகர்ப்புற சுகாதார மையம் (UPHC) ஒன்றின் சராசரி அளவு அது என்று கூறியுள்ளார். இன்னொரு ட்விட்டர்வாசியோ, சொன்ன கருத்த பாருங்க... எப்பவுமே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்த்து டைவர்ட் பண்ணாதீங்க சார்... சொன்னபடி 11 மெடிக்கல் காலேஜ் அனுமதி குடுத்து கட்டியாச்சா இல்லியா ..? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+