சின்னக் கொம்பனுடன் வாக்கிங்.. பாத்திங், ஸ்விம்மிங் கற்று கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: மாட்டு பொங்கலையொட்டி சின்ன கொம்பனை குளிக்க வைத்து நீச்சல் பயிற்சி கொடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தயார்படுத்தினார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உழைப்பு குறித்து கொரோனா வந்தவுடன் இந்த தமிழகமே அறிந்தது. கொரோனா தமிழகத்தில் பரவிய நாட்களில் விஜயபாஸ்கர் பிரஸ்மீட் கொடுத்தாலே அவரது கடும் உழைப்பையும் தூக்கமின்மையையும் அவரது கண்களும் முகமும் காட்டி கொடுத்துவிடும்.

அந்தளவுக்கு கொரோனாவை தமிழகத்தில் இருந்து ஒழிக்க சுகாதாரத் துறையை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அண்மையில் பொங்கல் பரிசையும் கொடுத்து புதுக்கோட்டையில் உள்ள மக்களை அசத்தினார்.

அச்சடிக்கப்பட்ட பை

அச்சடிக்கப்பட்ட பை

நம்ம விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர் எனும் அச்சடிக்கப்பட்ட பையில் பித்தளை பானை, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை அவராகவே கொண்டு போய் கொடுத்தார். அந்த வகையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய முறையில் பதில் அளிப்பார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டு காளை கொம்பன் பரிசை பெற்றது.

பயிற்சி

பயிற்சி

அவர் வீட்டு காளைகள் தொடர்ந்து பயிற்சியளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுப்பப்படுகின்றன. அது போல் சின்ன கொம்பன் காளையையும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார் செய்யும் பணிகள் நடைப்பெற்றன. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

குளிக்க வைத்தேன்

குளிக்க வைத்தேன்

அவர் கூறுகையில் எனது காளைகளுடன் நான் நேரத்தை செலவிட்டேன். எனது கொம்பன்களுடன் இன்று நான் விளையாடி மகிழ்ந்தேன். எனது சின்ன கொம்பனை காலையில் நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்றேன். அவனை குளிக்க வைத்தேன்.

ஜல்லிக்கட்டு போட்டி

நீச்சல் பயிற்சி கொடுத்தேன். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அவனை தயார் செய்தேன் என தனது ட்விட்டரில் வீடியோவுடன் பதிவிட்டிருந்தார். அமைச்சராகவே இருந்தாலும் தனது காளைகள் மீது எத்தனை பாசம் வைத்திருக்கிறார் என்பதையே அமைச்சரின் செயல் காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+