எலிக்கறி முயல்கறி ஆகும் அதிசயம்.. அதிர வைக்கும் வீடியோ!
எலிக்கறியை முயல்கறி என்று சொல்லி விற்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
Recommended Video
அறந்தாங்கி: "எலிக்கறி முயல்கறி ஆகும் அதிசயம்" என்ற பெயரில் வைரலாகி வரும் அந்த வீடியோவை பார்த்ததுமே ஷாக் எகிறி போகிறது!
அறந்தாங்கி கூத்தாடிவயல் பகுதியை சேர்ந்தவர் முருகன். பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். விவசாயிகளின் பயிர்களை நாசம் செய்யும் எலிகளை பிடிக்க குத்தகை பேசி, எலிபிடிப்பதுதான் இவரது தொழில். பிடித்த எலிகளை வயல்காரர்களிடம் தந்து, குத்தகை பணத்தையும் வாங்கி விடுவார்.
இப்படி பிடிக்கப்படும் எலிகளை வீட்டிலேயே வைத்து உறித்து பதப்படுத்தப்படுகிறது. பிறகு, அறந்தாங்கி, பெரியாளூர், பேராவூரணி அருகில் உள்ள சித்தாதிக்காடு கிராமங்களில் உள்ள டாஸ்மாக் பார்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதாம்.

ஒரு எலி ரூ.20
ஒரு எலி ரூ.20க்கு டாஸ்மாக்கில் வாங்கி கொள்கிறார்கள். அந்த எலியை பார்காரர்கள் துண்டுகளாக வெட்டி சமைத்து முயல் கறி என்று குடிமகன்களிடம் விற்பனை செய்கிறார்களாம். இது சம்பந்தமான ஒரு வீடியோ வைரலாகி உள்ளது.

வீடியோ
வீடியோவில் சம்பந்தப்பட்டவர் "ஆமாம்.. நான்தான் இதெல்லாம் செஞ்சது" என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவது போல நிற்கிறார். மற்றொரு நபரோ அவரை சுட்டிக்காட்டி இப்படி பேசுகிறார்: "வணக்கம். இவரு பேருதான் முருகன். அறந்தாங்கியை சேர்ந்தவர். நான் ஆயங்குடி கிராமத்தில் இருந்து பேசறேன். இப்போ இவரு எலி பிடிக்க போறாரு.

நடவடிக்கை தேவை
இவரு எலியை பிடிச்சு என்ன பண்றார்..ன்னா, ஒயின் ஷாப்பில் கொண்டுபோய் கொடுத்து, முயல்கறின்னு ஏமாத்தி தந்துடறார். அதனால் ஒயின்ஷாப்புல வாங்கி சாப்பிட கறி எலிக்கறி! இவரு தெளிவா, எல்லாரும் பார்க்கிறபடி நிக்கிறாரு பாருங்க. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் (என்று சொல்லி சற்று தொலைவில் கொன்று குவித்து, பதப்படுத்தப்பட்ட எலிகளை காட்டுகிறார்).

சப்ளையர் முருகன்
இந்த எலிக்கறியைதான், நண்பர்கள், மேற்பாங்காட்டில் இருக்கிற ஒயின் ஷாப்பிலும், பெரியாநல்லூரில் இருக்கும் ஒயின் ஷாப்பிலும் இந்த எலிக்கறியைதான் சாப்பிடறீங்க. நல்லா பார்த்துக்குங்க... இதை சப்ளை பண்றவர் நம்ம முருகன். இதைபத்தி இவரு கவலைப்பட மாட்டார். எந்த கோர்ட்டிலும் போய் வாதாடிக்குவார். நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்" என்று சொல்கிறார்.

விசாரணை தேவை
இந்த வீடியோ உண்மைதானா, உண்மையிலேயே முருகன் என்பவர் எலிகளை பிடித்து விற்கிறாரா? என உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications